ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் டஜ்நரைன் (Tagenarine) சந்தர்பால் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார். இவர் மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் ஷிவ்நரைன் சந்தர்பாலின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்திய தீவுகள் அணி ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் இரண்டு போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 467 பந்துகளை எதிர்கொண்டு 207 ரன்களை பதிவு செய்திருந்தார் ஜூனியர் சந்தர்பால்.
கடந்த 2022 நவம்பரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இவர் அறிமுகமானார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்தப் போட்டி அவர் விளையாயடும் 3-வது டெஸ்ட் போட்டி. தனது 5-வது டெஸ்ட் இன்னிங்ஸில் இரட்டை சதம் பதிவு செய்து அவர் அசத்தியுள்ளார். அவரது தந்தை 136-வது டெஸ்ட் இன்னிங்ஸில்தான் இரட்டை சதம் பதிவு செய்திருந்தார். 370 பந்துகளை எதிர்கொண்டு 203 ரன்களை ஷிவ்நரைன் சந்தர்பால் அப்போது இரட்டை சதம் எடுத்திருந்தார். இருவரும் நாட்-அவுட் பேட்ஸ்மேன்களாக களம் திரும்பியுள்ளனர்.
தனது தந்தையைப் போலவே இவரும் தனது முதல் டெஸ்ட் போட்டியில் அரை சதம் பதிவு செய்திருந்தார். அதே வழியில் தொடர்ந்து விளையாடி மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அதிக ரன்களை வரும் நாட்களில் குவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் அவர் மீது உள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago