டெஸ்ட் போட்டி எதிர்காலம்: வார்னர் கவலை

By செய்திப்பிரிவு

மெல்பர்ன்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது குறித்து நான் கவலை கொண்டுள்ளேன் என்று ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் கூறினார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட டேவிட் வார்னர் பேசியதாவது: அடுத்த ஐந்து முதல் 10 ஆண்டுகளில் என்ன நடக்கும். கிரிக்கெட் எந்த திசையில் செல்லும் என்பதை நினைத்தால் எனக்குக் கொஞ்சம் கவலை ஏற்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்
டில் விளையாட ஆர்வமாக இருக்கும் வீரர்களைக் கண்டு மகிழ்ச்சி கொள்கிறேன். அந்தப் பெருமிதம்தான் உங்கள் வாழ்க்கையில் முக்கியமானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது அற்புதமான விஷயமாகும். டெஸ்ட் போட்டிகள் உங்கள் கிரிக்கெட் திறமையை நன்குப் பரிசோதிக்கக் கூடியதாக இருக்கும்.

கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொள்ளவும் அந்த டெஸ்ட் போட்டிகள் வாய்ப்பை உருவாக்கும். ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட எண்ணினால் அதற்கேற்ப நமது திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும். தொடர்ச்சியாக ரன்களைக் குவிக்க வேண்டும்.சிட்னி தண்டர் அணி வீரர் டேவீஸிடம் அண்மையில் நான் பேசிக்கொண்டிருந்தேன். அவர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் (ஒருநாள், டி20) விளையாடுவதற்கு ஆர்வமாக உள்ளார். அவர் இப்போதைக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது போலத் தெரியவில்லை. டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மட்டும் விளையாடியவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. உலகம் முழுவதும் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் பங்கேற்பதற்குத் தான் பலருக்கும் ஆர்வம் உள்ளது. டி20 போட்டிகளில் விளையாட நினைக்கும் வீரர்கள், டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்கும் தயாராக இருக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்