டி20 தொடரை வெல்லப் போவது யார்? - கடைசி ஆட்டத்தில் இந்தியா-நியூஸிலாந்து இன்று மோதல்

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை வெல்லும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

நியூஸிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையே தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூஸிலாந்து அணியும், லக்னோவில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. இதனால் தொடர்
தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

தொடரை வெல்லப் போவது யார் என்ற நிலையில் கடைசி டி20 போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி ஆகியோர் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். சூர்யகுமார் யாதவ், கேப்டன் ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.

2-வது போட்டியிலும் சூர்ய குமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அபாரமாக விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் முக்கியமான இறுதி ஆட்டத்திலும் இருவரிடமிருந்தும் சிறப்பான இன்னிங்ஸை எதிர்பார்க்கலாம். இந்த ஆட்டத்தில் ஷுப்மன் கில், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி ஆகியோரிடமிருந்து உயர்மட்டத் திறன் வெளிப்படக்கூடும்.

அதேபோல் பவுலிங்கில் ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், தீபக் ஹூடா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி ஆட்டம் இது என்பதால் பந்துவீச்சாளர்கள் முழு திறனுடன் செயல்படுவர்.

அதேபோல் நியூஸிலாந்து அணியின் ஃபின் ஆலன், கான்வே, சாப்மேன், கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், பிரேஸ்வெல், சான்ட்னர் ஆகியோரிடமிருந்து ஒரு நல்ல இன்னிங்ஸை எதிர்பார்க்கலாம். மேலும், ஜேக்கப் டஃபி, மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி ஆகியோரிடமிருந்து சிறப்பான பவுலிங்கை எதிர்பார்க்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்