ஆஸ்திரேலிய ஓபனில் அசத்தல்: 22-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார் ஜோகோவிச் - ரபேல் நடாலின் சாதனையை சமன் செய்தார்

By செய்திப்பிரிவு

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். கிராண்ட் ஸ்லாம் தொடரில் அவர், கைப்பற்றும் 22-வது பட்டம் இதுவாகும். இதன் மூலம் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ள ஸ்பெயினின் ரபேல் நடாலின் சாதனையை சமன் செய்துள்ளார் நோவக் ஜோகோவிச்.

ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்பர்ன் நகரில் நடைபெற்று வந்தது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று 3-ம் நிலை வீரரான கிரீஸின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், 4-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுடன் மோதினார். சுமார் 2 மணி நேரம் 56 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-3, 7-6 (7-4), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார் நோவக் ஜோகோவிச்.

ஆஸ்திரேலிய ஓபனில் அவர், பட்டம் கைப்பற்றுவது இது 10-வது முறையாகும். அதேவேளையில் ஒட்டுமொத்தமாக ஜோகோவிச் வென்றுள்ள 22-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகவும் இது அமைந்தது. இதன் மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ள ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலின் சாதனையை சமன் செய்துள்ளார். இருவரும் தலா 22 பட்டங்களை வென்று குவித்துள்ளனர்.

இவர்களுக்கு அடுத்த இடங்களில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (20 பட்டங்கள்), அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸ் (14), ஆஸ்திரேலியாவின் ராய் எமர்சன் (12), ஆஸ்திரேலியாவின் ராட் லேவர், சுவீடனின் ஜோர்ன் போர்க் (தலா 11 பட்டங்கள்), அமெரிக்காவின் பில் டில்டென் (10) ஆகியோர் உள்ளனர்.

சினியகோவா, கிரெஜ்சிகோவா ஜோடி சாம்பியன்

மகளிர் இரட்டையர் பிரிவு இறுதி சுற்றில் செக்குடியரசின் கேத்ரினா சினியகோவா, பார்போரா கிரெஜ்சிகோவா ஜோடியானது ஜப்பானின் சுகோ அயோமா, ஷிபஹாரா ஜோடியை எதிர்த்து விளையாடியது. ஒரு மணி நேரம் 29 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கேத்ரினா சினியகோவா, பார்போரா கிரெஜ்சிகோவா ஜோடி 6-4, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த ஜோடி கிராண்ட் ஸ்லாம் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வது 7-வது முறையாகும். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபனிலும் இந்த ஜோடி வாகை சூடியிருந்தது. மேலும் இந்த ஜோடி கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் தொடர்ச்சியாக 24 வெற்றிகளை குவித்துள்ளது. ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட 2-வது ஜோடி என்ற பெருமையையும் சினியகோவா, கிரெஜ்சிகோவா இணை பெற்றுள்ளது. இதற்கு முன்னர் இந்த சாதனையை இத்தாலியின் சாரா எர்ரானி, ராபர்ட்டா வின்சி ஜோடி 2013, 2014-ம் ஆண்டுகளில் நிகழ்த்தி இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்