புவனேஷ்வர்: ஆடவருக்கான ஹாக்கி உலகக் கோப்பையில் ஜெர்மனி அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 5-4 என்ற கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி பட்டம் வென்றது.
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் பெல்ஜியம் ஆதிக்கம் செலுத்தியது. 9-வது நிமிடத்தில் வான் புளோரன்டும் அடுத்த நிமிடத்தில் கோசின்ஸ் டாங்குயும் பீல்டு கோல் அடிக்க பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலை பெற்றது.
28-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை வெல்லன் நிக்லாஸ் கோலாக மாற்ற ஜெர்மனி ஆட்டத்துக்குள் வந்தது. இதன் பின்னர் அந்த அணி வீரர்கள் துடிப்புடன் செயல்பட்டனர். 40-வது நிமிடத்தில் பெய்லட் கோன்சாலோ, பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோல் அடிக்க ஆட்டம் 2-2 என சமநிலையை எட்டியது.
அடுத்த 7-வது நிமிடத்தில் கிராம்புஷ் மேட்ஸ் பீல்டு கோல் அடிக்க ஜெர்மனி 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டம் முடிவடைய 2 நிமிடங்களே இருந்த நிலையில் பெனால்டி கார்னர் வாய்ப்பில் பெல்ஜியம் வீரர் பூம் டாம் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 3-3 என சமநிலையை அடைந்தது. எஞ்சிய 2 நிமிடங்களில் இரு அணிகள் தரப்பில் மேற்கொண்டு கோல் அடிக்கப்படவில்லை.
நிர்ணயிக்கப்பட்ட 60 நிமிடங்களில் ஆட்டம் 3-3 என சமன் ஆனது. இதனால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில்ஜெர்மனி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. உலகக் கோப்பை தொடரில் ஜெர்மனி பட்டம் கைப்பற்றுவது இது 3-வது முறையாகும்.
நெதர்லாந்துக்கு வெண்கலம்…
முன்னதாக 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் ஆஸ்திரேலியா, நெதர்லாந்துடன் மோதியது. இதில் நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றது.அந்த அணி சார்பில் கேப்டன் தியரி பிரிங்க்மான் 2 கோல்களையும், ஜான்சென் ஒரு கோலும் அடித்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago