2-வது டி 20-ல் இன்று மோதல் - வெற்றி நெருக்கடியில் இந்திய அணி

By செய்திப்பிரிவு

லக்னோ: இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு லக்னோவில் நடைபெறுகிறது.

இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் ராஞ்சியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. சுழலுக்கு சாதகமாக மாறிய ராஞ்சி ஆடுகளத்தில் 177 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணியால் 155 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சில் உள்ள பலவீனங்கள் வெளிப்பட்டன. உம்ரன் மாலிக் ஒரே ஓவரில் 16 ரன்களை வழங்கிய நிலையில் அர்ஷ்தீப் சிங் ஆட்டத்தின் கடைசி ஓவரில் 27 ரன்களை தாரைவார்த்தார். இதுவே பேட்டிங்கில் இந்திய அணிக்கு அதிக அழுத்தத்தை உருவாக்கியது. இதனால் இன்றைய ஆட்டத்தில் பந்து வீச்சில் சில மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது.

பேட்டிங்கில் ஷுப்மன் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடாஆகியோர் தங்களது இடத்தை அணியில் தக்கவைத்துக் கொள்ளவேண்டுமானால் சிறந்த திறனைவெளிப்படுத்தியாக வேண்டும் என்ற நிலையில் உள்ளனர். இதில் இஷான் கிஷன் கடைசியாக விளையாடிய 7 இன் னிங்ஸ்களில் (ஒருநாள் போட்டி, டி 20) ஒருமுறை கூட 40 ரன்களை எட்டவில்லை. இரு முறை மட்டுமே இரட்டை இலக்கத்தை தொட்டிருந்தார்.

தீபக் ஹூடா கடைசியாக விளையாடிய 13 இன்னிங்ஸ்களில் சராசரி 17.88-ஐ மட்டுமே கொண்டுள்ளார். ராஞ்சி போட்டியில் 7-வது இடத்தில் களமிறங்கிய தீபக் ஹூடா10 பந்துகளில் 10 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். சுழற்பந்து வீச்சாளர்களே வீசிக் கொண்டிருந்தநிலையில் அவர், ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யவில்லை.

ராஞ்சி போட்டியில் வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு 2 விக்கெட் கைப்பற்றியதுடன் பேட்டிங்கில் 28 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தது சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் டி 20கிரிக்கெட் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்திய அணி கூடுதல் கவனத்துடன் செயல்படக்கூடும்.

நியூஸிலாந்து அணியை பொறுத்தவரை இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரைகைப்பற்றுவதில் முனைப்பு காட்டக்கூடும். டேவன் கான்வே, டேரில் மிட்செல் மீண்டும் ஒரு முறை இந்திய அணியின் பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி தரக்கூடும்.

நேரம்: இரவு 7 மணி

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

52 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்