ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - இறுதிப் போட்டியில் ரைபகினா, சபலெங்கா

By செய்திப்பிரிவு

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் விம்பிள்டன் சாம்பியன் எலெனா ரைபகினா, பெல்லாரசின் சபலெங்கா ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் 11-வது நாளான நேற்றுமகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் 22-ம் நிலை வீராங்கனையும், விம்பிள்டன் சாம்பியனுமான கஜகஸ்தானின் எலெனா ரைபகினா, 24-ம் நிலை வீராங்கனையும் இரு முறை ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றவருமான பெல்லாரசின் விக்டோரியா அசரங்காவை எதிர்த்து விளையாடினார்.

ஒரு மணி நேரம் 41 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் எலெனா ரைபகினா 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஆஸ்திரேலிய ஓபனில் எலெனா ரைபகினா, இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் அதிகபட்சமாக 3-வது சுற்றை கடந்தது இல்லை. நாளை (28-ம்தேதி) நடைபெறும் இறுதிப் போட்டியில் 5-ம் நிலை வீராங்கனையான பெல்லாரசின் சபலெங்காவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார் எலெனா ரைபகினா.

சபலெங்கா, அரை இறுதி சுற்றில் போலந்தின் மக்டா லினெட்டுடன் மோதினார். இதில் சபலெங்கா 7-6 (7-1), 6-2 என்ற செட் கணக்கில்வெற்றி பெற்றார். 24 வயதானசபலெங்கா கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவது இதுவே முதன் முறையாகும். இதற்கு முன்னர் அவர், விம்பிள்டனில் ஒரு முறையும், அமெரிக்க ஓபனில் இரு முறையும் அரை இறுதி சுற்று வரை சென்றுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்