ராஞ்சி: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி நாளை விளையாடுகிறது. இந்தப் போட்டி ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி நகரில் அமைந்துள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சொந்த ஊர். இந்நிலையில், பயிற்சியில் ஈடுபட்டு இருந்த இந்திய வீரர்களுடன் தோனி நீண்ட நேரம் பேசியுள்ளார்.
அந்த வீடியோவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பகிர்ந்துள்ளது. நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 3-0 என்ற கணக்கில் இந்தியா ஒருநாள் தொடரை வென்ற நிலையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்குகிறது.
இந்தத் தொடரின் முதல் போட்டியில் பங்கேற்கும் விதமாக இரு அணி வீரர்களும் ராஞ்சியில் முகாமிட்டுள்ளனர். இந்த தொடருக்கு பின்னர் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
எதிர்வரும் ஐபிஎல் சீசனுக்காக தோனி தற்போது பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் ராஞ்சியில் உள்ள ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்திய அணி வீரர்களை சந்தித்தார். இளம் வீரர்களுடன் நீண்ட நேரம் பேசியுள்ளார் தோனி. இந்த சந்திப்பு குறித்த வீடியோவை பிசிசிஐ பகிர்ந்துள்ளது.
» விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கோரி தஞ்சையில் விவசாயிகள் டிராக்டர் பேரணி
» அல்வா விழாவுடன் தொடங்கியது 2023-24 மத்திய பட்ஜெட் தயாரிப்பின் இறுதிக் கட்டம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago