ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - சிட்சிபாஸ், அசரங்கா அரை இறுதிக்கு முன்னேற்றம்

By செய்திப்பிரிவு

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மகளிர் ஒற்றையர் பிரிவில் 3-ம் நிலை வீராங்கனையான ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார் பெல்லாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரங்கா.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 9-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற கால் இறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் 18-ம் நிலை வீரரான ரஷ்யாவின் கரேன் கச்சனோவ், 29-ம் நிலை வீரரான அமெரிக்காவின் செபஸ்டியன் கோர்டாவை எதிர்த்து விளையாடினார்.

இதில் கரேன் கச்சனோவ் 7-6 (7-5), 6-3, 3-0 என்ற செட் கணக்கில் முன்னிலை வகித்த போது செபஸ்டியன் கோர்டாவுக்கு வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர், ஆட்டத்தில் இருந்து விலகினார். இதனால் கரேன் கச்சனோவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் 3-ம் நிலை வீரரான கிரீஸின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 6-3, 7-6 (7-2), 6-4 என்ற செட் கணக்கில் 71-ம் நிலை வீரரான செக்குடியரசின் ஜிரி லெஹெக்காவை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 22-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலெனா ரைபகினா, 17-ம் நிலை வீராங்கனையான லத்வியாவின் ஜெலினா ஓஸ்டாபென்கோவை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரைபகினா 6-2, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

அரை இறுதியில் ரைபகினா, 24-ம் நிலை வீராங்கனையான பெல்லாரசின் விக்டோரியா அசரங்காவை எதிர்கொள்கிறார். அசரங்கா, கால் இறுதி சுற்றில் 3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை 6-4, 6-1 என்ற நேர் செட்டில் தோற்கடித்தார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 37 நிமிடங்களில் முடிவடைந்தது.

சானியா ஜோடி முன்னேற்றம்: கலப்பு இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, ரோகன்போபண்ணா ஜோடியானது லத்வியாவின் ஜெலினா ஓஸ்டாபென்கோ, ஸ்பெயினின் டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடியை எதிர்த்து விளையாட இருந்தது. ஆனால் இந்த ஜோடி கடைசி நேரத்தில் விலகியது. இதனால் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது.

அரை இறுதியில் சானியா மிர்சா, ரோகன் போண்ணா ஜோடியானது அமெரிக்காவின் டிசைரே க்ராவ்சிக், இங்கிலாந்தின் நீல் ஸ்குப்ஸ்கிஜோடியை எதிர்கொள்கிறது. டிசைரே க்ராவ்சிக், நீல் ஸ்குப்ஸ்கி ஜோடி கால் இறுதி சுற்றில் 4-6,6-3,10-5 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்ட், இங்கிலாந்தின் ஜெமி முர்ரே ஜோடியை வீழ்த்தியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்