சென்னையில் ஜடேஜா தீவிர பயிற்சி

By செய்திப்பிரிவு

சென்னை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று சவுராஷ்ரா அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் சவுராஷ்டிரா அணிக்கு ரவீந்திர ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த மாத தொடக்கத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான உடற்தகுதியை நிருபிக்க வேண்டிய நிலையில் ஜடேஜா உள்ளார். இதற்காகவே சென்னையில் நடைபெற உள்ள ரஞ்சி போட்டியில் அவர், விளையாட உள்ளார். இதையொட்டி நேற்று அவர், தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டார். சுமார் 30 நிமிடங்கள் பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்ட அவர், அடுத்த 30 நிமிடங்கள் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டார். கடந்த ஆகஸ்ட் மாதம்ஆசிய கோப்பை தொடரில் விளையாடிய போது ஜடேஜாவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர், சுமார் 5 மாதங்கள் சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை. நேற்று பயிற்சியில் ஈடுபட்ட ஜடேஜாவின் உடல் தகுதி முன்னேற்றங்களை தேசிய கிரிக்கெட் அகாடமி பயிற்றுனர் கண்காணித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்