இந்தூர்: இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்திலும், ராய்பூரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது.
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி 2-0 என தன்வசப்படுத்தியது. இந்நிலையில் கடைசி போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட்மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
முதல் ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங்கில் பிரமாதமாக செயல்பட்ட நிலையில் 2-வது ஆட்டத்தில் பந்து வீச்சில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட நியூஸிலாந்து அணியை இந்திய பந்து வீச்சாளர்கள் 108 ரன்களுக்குள் சுருட்டினர்.
» காயம் குறித்த அச்சுறுத்தல் இல்லாத வரை பிரதான வீரர்கள் ஐபிஎல் விளையாடலாம்: ராகுல் திராவிட்
தொடரை வென்றுவிட்டதால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் முன்னணி வீரர்கள் சிலருக்கு ஓய்வு கொடுக்கப்படக்கூடும்.
இருப்பினும் தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றுவதில் இந்திய அணி தீவிரம் காட்டக்கூடும். அதேவேளையில் நியூஸிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற முயற்சி செய்யக்கூடும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago