மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலெனா ரைபகினாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையும், கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன், அமெரிக்க ஓபனில் பட்டம் வென்றவருமான போலந்தின் இகா ஸ்வியாடெக், போட்டித் தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள கஜகஸ்தானின் எலெனா ரைபகினாவை எதிர்த்து விளையாடினார். சுமார் ஒரு மணி நேரம் 29 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியனான ரைபகினா 6-4, 6-4 என்ற நேர் செட்டில் ஸ்வியாடெக்கை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
ஓபன் எரா கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 1968-ம் ஆண்டுக்கு பிறகு ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் கால் இறுதி சுற்றுக்கு முன்னதாக போட்டித் தர வரிசையில் முதல் இரு இடங்களில் உள்ள வீரர், வீராங்கனைகள் வெளியேறுவது இதுவே முதன்முறையாகும். இம்முறை ஆடவர் பிரிவில் ரபேல் நடால், காஸ்பர் ரூட் ஆகியோர் தொடக்க நிலையிலேயே தோல்வி அடைந்து வெளியேறி இருந்தனர். மகளிர் பிரிவில் 2-ம் நிலை வீராங்கனையான துனிசியாவின் ஆன்ஸ் ஜபூரும் 2-வது சுற்றில் தோல்வி கண்டிருந்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் 7-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காஃப் 5-7, 3-6 என்ற நேர் செட்டில் 17-ம்நிலை வீராங்கனையான லத்வியாவின் ஜெலினா ஓஸ்டாபென்கோவிடம் தோல்வியடைந்தார். அதேவேளையில் 3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 7-5, 6-2 என்ற செட்கணக்கில் 20-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் பார் போராகிரஜிகோவாவை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 6-ம் நிலை வீரரான கனடாவின் பெலிக்ஸ் அகர் அலியாசிசை 4-6, 6-3, 7-6 (7/2), 7-6 (7/3) என்ற செட் கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார் செக்குடியரசின் ஜிரி லெஹெக்கா. கடந்த ஆண்டு நடைபெற்ற 4 கிராண்ட் ஸ்லாம் தொடர்களிலும் முதல் சுற்றுடன் வெளியேறிய ஜிரி லெஹெக்கா, இம்முறை 6-ம் நிலை வீரரரை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் நுழைந்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மற்றொரு ஆட்டத்தில் 18-ம் நிலை வீரரான ரஷ்யாவின் கரேன் கச்சனோவ் 6-0, 6-0, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஜப்பானின் நிஷியோகாவை தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.
10-ம் நிலை வீரரான போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸ் 6-3, 3-6, 2-6, 6-1, 6-7 (7-10) என்ற செட் கணக்கில் 29-ம் நிலை வீரரான அமெரிக்காவின் செபஸ்டியான் கோர்டாவிடம் தோல்வி கண்டார்.
சானியா மிர்சா ஜோடி தோல்வி
மகளிர் இரட்டையர் பிரிவு 2-வதுசுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, கஜகஸ்தானின் அனா டேனிலினா ஜோடியானது பெல்ஜியத்தின் அலிசன் வான் உய்ட்வாங்க், உக்ரைனின் அன்ஹெலினா கலினினா ஜோடியை எதிர்த்து விளையாடியது. 2 மணி நேரம் ஒரு நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சானியா ஜோடி 4-6, 6-4, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago