ஹாக்கி உலகக் கோப்பை 2023 தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா

By செய்திப்பிரிவு

புவனேஷ்வர்: நடப்பு ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது. நியூஸிலாந்து அணிக்கு எதிரான கிராஸ்ஓவர் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3(4) - 3(5) என ஆட்டத்தை இந்தியா இழந்தது.

ஒடிசாவின் புவனேஷ்வர் மற்றும் ரூர்கேலாவில் உள்ள இரண்டு ஹாக்கி விளையாட்டு மைதானங்களில் இந்த தொடருக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 16 நாடுகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. இதில் குரூப்-டி பிரிவில் இந்திய அணி இடம் பெற்றிருந்தது. இந்தப் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து கிராஸ்ஓவர் போட்டியில் விளையாட இந்தியா தகுதி பெற்றது. இது காலிறுதிக்கு முந்தைய போட்டியாகும்.

கிராஸ்ஓவர் போட்டியில் தோல்வி: இந்த போட்டி ஞாயிறு அன்று புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணி ஆட்டத்தின் 17 மற்றும் 24-வது நிமிடத்தில் 2 கோல்களை பதிவு செய்து முன்னிலை பெற்றது. 28-வது நிமிடத்தில் நியூஸிலாந்து அணி முதல் கோலை பதிவு செய்தது. தொடர்ந்து 40-வது நிமிடத்தில் மூன்றாவது கோலை இந்தியா பதிவு செய்தது.

அதன் பின்னர் 43 மற்றும் 49-வது நிமிடத்தில் நியூஸிலாந்து அணி கோல் பதிவு செய்து 3-3 என சம நிலையை எட்டியது. 60 நிமிடங்கள் முடிவில் இரு அணிகளும் கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.

அதன் காரணமாக பெனால்டி ஷூட் அவுட் நடத்தப்பட்டது. இதில் 4-5 என நியூஸிலாந்து வென்றது. அதனால் இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

59 mins ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்