பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா- பாக். இன்று மோதல்

By ஏஎஃப்பி

பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இன்று பிரிஸ்பனில் மோதுகின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி காலை 8.30 மணிக்கு தொடங்குகிறது.

மிஸ்பா உல்-ஹக் தலைமை யிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பனில் இன்று பகலிரவு போட்டியாக தொடங்குகிறது.

பாகிஸ்தான் அணிக்கு இது 2-வது பகலிரவு டெஸ்ட் போட்டியாகும். அந்த அணி கடந்த அக்டோபர் மாதம் துபையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக பகலிரவு டெஸ்ட்டில் பங்கேற்றிருந்தது. ஆனால் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலிய மைதானம் முற்றிலும் மாறுபட்டது.

ஆஸ்திரேலிய அணி இரண்டு பகலிரவு ஆட்டங்களில் விளை யாடிய அனுபவம் கொண்டுள்ளது. நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதனால் மீண்டும் ஒரு முறை ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியை அணுகுகிறது. அதேவேளையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற உற்சாகத்தில் உள்ளது. இந்த ஆட்டம் பிங்க் பந்தில் பகலிரவாக நடைபெற்றதால் பாகிஸ்தான் அணிக்கு கூடுதல் நம்பிக்கை கிடைத்துள்ளது.

பாகிஸ்தான் இதுவரை ஆஸ்தி ரேலியாவில் 11 முறை சுற்றுப் பயணம் செய்து விளையாடி உள்ளது. இதில் ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை வென்றதில்லை. கடைசியாக நடைபெற்ற தொடரில் 0-3 என பாகிஸ்தான் படுதோல்வி கண்டிருந்தது. 1999-ம் ஆண்டில் இருந்து இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் பாகிஸ்தான் 9 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.

இம்முறை நியூஸிலாந்து தொடரில் தோல்விகளை சந்தித்த நிலையில்தான் ஆஸ்திரேலிய போட்டியை பாகிஸ்தான் எதிர் கொள்கிறது. மாறாக தொடர்ச்சியாக 5 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணி தற்போது முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் எழுச்சி கண்ட ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, பாகிஸ் தானுக்கு எதிரான தொடரில் முழுமையாக ஆதிக்கம் செலுத்த முயலும். பிரிஸ்பன் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி 1988 முதல் 27 போட்டிகளில் தோல்வியையே சந்தித்தில்லை என்ற பெருமையை பெற்றுள்ளது.

அதேவேளையில் பாகிஸ்தான் அணி இந்த மைதானத்தில் 4 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் ஒரு வெற்றியைகூட அந்த அணி பெற்றதில்லை. பாகிஸ்தான் அணியின் தற்போதைய பயிற்சி யாளர் மிக்கி ஆர்தர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்தி ரேலிய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதன் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக மிக்கி ஆர்தர் சந்திக்கும் முதல் தொடர் இதுதான். இதனால் இந்த தொடர் தனிப்பட்ட முறையில் மிக்கி ஆர்தருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படு கிறது.

மிக்கி ஆர்தர் தென் ஆப்பிரிக்க அணிக்கு பயிற்சியாளராக இருந்த போது 2008-09ம் ஆண்டில் ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணி டெஸ்ட் தொடரை 2-1 என வென்றது. இதன் மூலம் 16 வருடங் களுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் வெளிநாட்டு அணி என்ற பெருமையை அப்போது தென் ஆப்பிரிக்கா பெற்றது.

இதனால் இம்முறை பாகிஸ்தான் அணி மீது சற்று எதிர்பார்ப்பு உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்