உலகக் கோப்பை ஹாக்கி | கால் இறுதியில் ஆஸ்திரேலியா

By செய்திப்பிரிவு

ரூர்கேலா: ஆடவருக்கான உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் ஆஸ்திரேலிய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 9-2 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

உலகக் கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா 9-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் கோவர்ஸ் பிளேக் 4 கோல்கள் (3, 14, 18 மற்றும் 19-வது நிமிடம்) அடித்தார்.

கிரெய்க் டாம் (9-வது நிமிடம்), ஹார்வி ஜேக் (21-வது நிமிடம்), பியல் டேனியல் (27-வது நிமிடம்), ஹேவர்டு ஜெர்மி (31-வது நிமிடம்), பிராண்ட் டிம் (46-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்தவெற்றியின் மூலம் ‘ஏ’ பிரிவில் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது ஆஸ்திரேலிய அணி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்