புனே: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 71-வது சதம் பதிவு செய்யும் வரையில் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என சொன்ன ரசிகருக்கு அவரது திருமண நாளன்று எதிர்பாராத பரிசு ஒன்று கிடைத்துள்ளது. அது சமூக வலைதளத்தில் கவனமும் பெற்றுள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு மக்களிடையே கிடைக்கும் வரவேற்பே தனி ரகமாக இருக்கும். அதுவும் கிரிக்கெட் வீரர்களை இங்கு கடவுளாக வழிபடுவதும் உண்டு. அப்படி கொண்டாடப்படும் வீரர்களில் ஒருவர்தான் விராட் கோலி. அவரது கோடான கோடி ரசிகர்களில் ஒருவர்தான் அமன் அகர்வால்.
கோலியின் 70 மற்றும் 71-வது சதத்திற்கு இடையிலான காலம் சுமார் 1020 நாட்கள். 2019 நவம்பரில் அவர் 70-வது சதத்தை வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பதிவு செய்தார். 71-வது சதத்தை கடந்த 2022 செப்டம்பரில் ஆசிய கோப்பை டி20 தொடரில் பதிவு செய்திருந்தார்.
அந்த இடைப்பட்ட காலத்தில் அவர் அடுத்த சதத்தை எப்போது பதிவு செய்வார் என்ற எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. அது குறித்து பலரும் பல்வேறும் விதமான கருத்துகளை சொல்லி வந்தனர்.
அவர்களில் அமன் அகர்வாலும் ஒருவர். ‘கோலி 71-வது சதத்தை பதிவு செய்யும் வரையில் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்’ என அவர் சொல்லி இருந்தார். கோலி சதம் பதிவு செய்த நிலையில் அமனுக்கு கடந்த ஞாயிறு அன்று திருமணம் நடந்துள்ளது. அன்றைய தினம்தான் கோலி, இலங்கை அணிக்கு எதிராக தனது 74-வது சதத்தை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பதிவு செய்திருந்தார்.
“நான் 71-வது சதம்தான் கேட்டேன். ஆனால் எனது வாழ்நாளின் ஸ்பெஷல் நாளன்று அவர் 74-வது சதம் பதிவு செய்துவிட்டார்” என அமன் ட்வீட் செய்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago