மகளிர் ஐபிஎல் டி20 கிரிக்கெட் | ஒளிபரப்பு உரிமையை ரூ.951 கோடிக்கு வாங்கியது வயகாம் 18 நிறுவனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மகளிர் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை ஒளிபரப்புவதற்கான உரிமையை ரூ.951 கோடிக்கு வயகாம் 18 நிறுவனம் ஏலம் எடுத்துள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.

மகளிருக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை முதன் முறையாக பிசிசிஐ நடத்த உள்ளது. 5 அணிகள் கலந்து கொள்ளும் இந்ததொடரின் அனைத்து ஆட்டங்களும் மும்பையில் நடைபெறுகின்றன. இந்த தொடரில் கலந்து கொள்ளும் அணிகளின் விவரம் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து போட்டிகளை மார்ச் முதல் வாரத்தில் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மகளிர் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலத்தை மும்பையில் நேற்று பிசிசிஐ நடத்தியது. ஏலத்தில் வயகாம் 18, டிஸ்னி ஸ்டார், சோனி ஆகிய நிறுவனங்கள் கலந்துகொண்டன. இதில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு போட்டிகளை ஒளிபரப்புவதற்கான டிவி மற்றும் டிஜிட்டல் உரிமையை வயகாம் 18 நிறுவனம் ரூ.951 கோடிக்கு ஏலம் எடுத்தது. இந்த வகையில் மகளிர் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ஒரு ஆட்டத்துக்கு ரூ. 7.09 கோடியை பிசிசிஐ-க்கு, வயகாம் 18 நிறுவனம் வழங்கும்.

ஆடவருக்கான ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் டிஜிட்டல் உரிமையை கடந்த ஆண்டு ஜூன் மாதம் வயகாம் 18 நிறுவனம் ரூ. 23,758 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்