சச்சினின் 100 சதங்கள் சாதனையை முறியடிப்பாரா கோலி? - சுனில் கவாஸ்கர் பதில்

By செய்திப்பிரிவு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி முறியடிப்பாரா என்ற கேள்வி சுனில் கவாஸ்கரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் தனது பதிலை அளித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் சுமார் ஆயிரம் நாட்கள் சதம் பதிவு செய்ய முடியாமல் தடுமாறி வந்தார் விராட் கோலி. ஆனால் அண்மைய நாட்களாக அவர் 3 சதங்களை வெறும் 30 நாட்கள் இடைவெளியில் பதிவு செய்துள்ளார். அவர் கடைசியாக விளையாடிய 4 ஒருநாள் போட்டிகளில் 3 சதங்களை பதிவு செய்துள்ளார்.

“சச்சின் 40 வயது வரை விளையாடினார். அதற்கான உடல் திறனோடும் அவர் இருந்தார். கோலியும் ஃபிட்னஸ் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வருபவர். ஆண்டுக்கு 6-7 சதங்கள் வீதம் அவர் பதிவு செய்தால் அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் 100 சதம் என்ற மைல்கல்லை அவர் எட்டுவார். அதற்கு அவர் 40 வயது வரை விளையாட வேண்டும். அந்த வயதில் அவர் விளையாடினால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை” என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் என மொத்தம் 74 சதங்களை கோலி பதிவு செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 27 சதங்கள், ஒருநாள் கிரிக்கெட்டில் 46 சதங்கள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் 1 சதமும் பதிவு செய்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்