ஒடிசாவில் காணாமல்போன மகளிர் கிரிக்கெட் வீராங்கனை - இரு நாட்களுக்கு பின் வனத்தில் சடலமாக மீட்பு

By செய்திப்பிரிவு

கட்டாக்: ஒடிசாவில் காணாமல்போனதாக தேடப்பட்டுவந்த கிரிக்கெட் வீராங்கனை ராஜஸ்ரீ ஸ்வைன் (Rajashree Swain) வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஒடிசாவைச் சேர்ந்த 22 வயது மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ராஜஸ்ரீ ஸ்வைன் (Rajashree Swain). பூரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் தேசிய அளவிலான போட்டிக்காக ஒடிசா கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்காக பஜ்ரகபட்டி சென்றிருந்தார். மொத்தம் 25 வீராங்கனைகள் பங்கேற்ற இந்த முகாமில் இருந்து புதுச்சேரி செல்லும் அணியின் இறுதிப்பட்டியலில் ராஜஸ்ரீ இடம்பெறவில்லை.

இறுதிப்பட்டியல் 10ம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், மறுநாள் வீராங்கனைகள் பயிற்சிக்கு செல்ல ராஜஸ்ரீ தனது தந்தையை பார்க்க பூரிக்குச் செல்வதாக சொன்னவர் அதன்பின் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து காணாமல் போயுள்ளார். அதேநேரம், மாநில அணியில் அவர் பெயர் இல்லை என்றதும் ராஜஸ்ரீ அழுதுள்ளார். இதனை சக வீராங்கனைகள் கண்டுள்ளனர். இதையடுத்து ஊருக்குச் செல்லவில்லை என்பதை அறிந்த பயிற்சியாளர் போலீஸில் புகார் தெரிவிக்க, அவரை குறித்து தேடிவந்தனர்.

இந்நிலையில்தான், கட்டாக் மாவட்டத்தின் அதாகர் பகுதியில் உள்ள குருதிஜாதியா வனப்பகுதியில் உள்ள மரத்தில் ராஜஸ்ரீ தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது ஸ்கூட்டர் வனப்பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே ராஜஸ்ரீ மரணத்துக்கான காரணம் தெரியவரும் என்று போலீஸ் தரப்பு சொல்லிவருகிறது. ஆனால், அவரின் பெற்றோர், இதனை கொலை என்றும் ராஜஸ்ரீயின் உடலில் காயங்கள் இருந்தன என்றும் புகார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் ஒடிஷா மாநில கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்