ஆஸி, நியூசி., தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு - டெஸ்ட் போட்டிகளில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் சேர்ப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்திய அணி தொடரை வென்ற நிலையில் நாளை மறுநாள் மூன்றாவது ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடக்கவுள்ளது.

இலங்கை தொடருக்கு பின், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், நியூஸிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த இரண்டு தொடர்களும் இந்தியாவில் நடக்கவுள்ளன. இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் வரும் 18-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. அதேபோல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் பிப்ரவரி மாதம் 9ம் தேதி தொடங்குகிறது. இந்த இரு தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது.

அதன்படி, நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ரோஹித் சர்மாவும், டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியாவும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருநாள் தொடரில் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டி20 அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பிரிதிவி ஷா நீண்ட நாட்களுக்கு பிறகு இடம்பிடித்துள்ளனர். இளம்வீரர்கள் ஜிதேஷ் சர்மா, முகேஷ் குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல்முறையாக டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேநேரம் இந்த இரு போட்டிகளிலும் கே.எல்.ராகுல் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் குடும்ப சூழ்நிலை காரணமாக பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை பொறுத்தவரை கே.எல்.ராகுல் மற்றும் அக்சர் படேல் இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் முதல்முறையாக டெஸ்ட் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். மேலும், இளம்வீரர்கள் கேஎஸ் பாரத் மற்றும், இஷான் கிஷன் இருவரும் அணியில் இடம்பிடித்துள்ளனர். காயத்தால் அவதிப்பட்டு வந்த ரவீந்திர ஜடேஜா உடற்தகுதி பெறும்பட்சத்தில் அணியில் இணைத்துக்கொள்ளப்படுவார் என்றும் பிசிசிஐ நிர்வாகம் அறிவித்துள்ளது.

நியூசிலாந்து ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி விவரம்: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எஸ்.பரத் , ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக்.

நியூசிலாந்து டி20 போட்டிகளுக்கான இந்திய அணி விவரம்: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி, பிருத்வி ஷா, முகேஷ் குமார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம்: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத், இஷான் கிஷன், ரவி அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்