புவனேஷ்வர்: ஹாக்கி உலகக் கோப்பை தொடர் ஒடிசா மாநிலத்தில் நாளை துவங்க உள்ளது. தொடரை நடத்தும் அணி என்ற அந்தஸ்துடன் இந்திய அணி விளையாடுகிறது. இந்த தொடரில் மொத்தம் 44 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தப் போட்டிகளை நேரலையில் தொலைக்காட்சி மற்றும் ஆன்லைனில் பார்ப்பது எப்படி என்பதை பார்ப்போம்.
புவனேஷ்வர் மற்றும் ரூர்கேலாவில் உள்ள இரண்டு விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெற உள்ளது. மொத்தம் 16 நாடுகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன. இந்திய அணி ‘டி’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதே பிரிவில் இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் வேல்ஸ் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.
இந்தியாவில் இந்த போட்டிகளில் நேரலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி சேனலில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ஆன்லைனில் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி விவரம்: அபிஷேக், சுரேந்தர் குமார், மன்பிரீத் சிங், ஹர்திக் சிங், ஜர்மன்பிரீத் சிங், மன்தீப் சிங், ஹர்மன்ப்ரீத் சிங் (கேப்டன்), லலித் உபாத்யாய், கிரிஷன் பதக், சஞ்சீப் செஸ், பிஆர் ஸ்ரீஜேஷ், நீலகண்ட சர்மா, ஷம்ஷேர் சிங், வருண் குமார், ஆகாஷ்தீப் சிங், அமித் ரோஹிதாஸ் (துணை கேப்டன்), விவேக் சாகர் பிரசாத் மற்றும் சுக்ஜீத் சிங்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago