IND vs SL 1st ODI | இறுதிவரை போராடிய ஷனகா: இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

By செய்திப்பிரிவு

கவுகாத்தி: இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 374 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்களை எட்டி இருந்தது. அந்த அணியின் கேப்டன் ஷனகா அபாரமாக விளையாடி சதம் விளாசி இருந்தார்.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் அந்த அணி இழந்தது. தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணியுடன் விளையாடி வருகிறது. கவுகாத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டி தொடரின் முதல் போட்டி.

இதில் டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட் செய்து 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 373 ரன்கள் குவித்தது. 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இலங்கை அணி விரட்டியது.

அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை ஒரு பக்கம் இழந்தது. இருந்தாலும் கேப்டன் ஷனகா, தொடக்க ஆட்டக்காரர் நிசங்கா (72 ரன்கள்), தனஞ்சய டி சில்வா (47 ரன்கள்) ஆகியோர் சிறப்பாக பேட் செய்திருந்தனர். ஷனகா இறுதி வரை அவுட்டாகாமல் 88 பந்துகளில் 108 ரன்கள் குவித்திருந்தார். 9-வது விக்கெட்டுக்கு ரஜிதா உடன் 100 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார் அவர். 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 306 ரன்களை எட்டி இருந்தது. அதன் மூலம் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக, முதல் இன்னிங்ஸில் இந்திய அணிக்காக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 143 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கில் 70 ரன்களிலும், ரோகித் 83 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.

கோலி மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் இடையே குட்டி பார்ட்னர்ஷிப் உருவானது. இருந்தாலும் ஸ்ரேயஸ், 28 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ராகுலுடன் 90 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் கோலி. ராகுல் 39 ரன்களில் அவுட்டானார்.

மறுமுனையில் அதிரடியாக பேட் செய்து வந்த கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 45-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 87 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 129.89. ஹர்திக் 14 ரன்களிலும், அக்சர் படேல் 9 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 373 ரன்களை குவித்திருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்