* இந்திய கேப்டன்களில் டெஸ்ட் போட்டிகளில் தோனி கடந்த 2013-ல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்த 224 ரன்களே அதிகபட்சமாக இருந்தது. இந்த சாதனையை தற்போது கோலி முறியடித்துள்ளார். கோலி 235 ரன்கள் குவித்துள்ளார்.
* இங்கிலாந்துக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையும் கோலி படைத்துள்ளார். இதற்கு முன்னர் 1993-ல் மும்பையில் நடைபெற்ற டெஸ்ட்டில் வினோத் காம்ப்ளி 224 ரன்கள் சேர்த்திருந்தார்.
ஒரே தொடரில் 640
* இங்கிலாந்துக்கு எதிரான தற்போதைய தொடரில் கோலி 640 ரன்கள் சேர்த்துள்ளார். இதற்கு முன்னர் அந்த அணிக்கு எதிராக 2002-ல் ராகுல் டிராவிட் 602 ரன்கள் சேர்த்ததே இந்திய வீரரின் அதிகபட்ச ரன்குவிப்பாக இருந்தது.
* ஒரே தொடரில் இந்திய வீரர் ஒருவர் 600-க்கும் மேற்பட்ட ரன்களை சேர்ப்பது இது 7-வது முறையாகும். இந்த வகையில் கோலி, கவாஸ்கர், டிராவிட் ஆகியோர் தலா இரண்டு முறை 600 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர்.
* கேப்டனாக கோலி 2 ஆயிரம் ரன்களை 65.50 சராசரியுடன் எட்டியுள்ளார். இந்த வகையிலான சாதனையில் பிராட்மேன் 101.51 சராசரியுடன் முதலிடத்தில் உள்ளார். தற்பாது அவருக்கு அடுத்தபடியாக கோலி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago