சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தென் ஆப்ரிக்காவின் பிரிட்டோரியஸ் ஓய்வு

By செய்திப்பிரிவு

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான டுவைன் பிரிட்டோரியஸ் தொழில்முறை ரீதியிலான டி 20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்தும் விதமாக, அனைத்துவிதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

33 வயதான டுவைன் பிரிட்டோரியஸ் தென் ஆப்பிரிக்க அணிக்காக 30 சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டி, 27 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 3 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டி 20 கிரிக்கெட் ஆட்டத்தில் பிரிட்டோரிஸ் 17 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இதன் மூலம் சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க வீரர்களில் சிறந்த பந்து வீச்சு சாதனையை பதிவு செய்திருந்தார்.

டுவைன் பிரிட்டோரியஸ் கூறும்போது, “சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். இனிமேல் தொழில்முறை டி 20 லீக்குகளிலும் மற்ற குறுகிய வடிவிலான கிரிக்கெட்டிலும் எனது கவனத்தை செலுத்தப்போகிறேன்” என்றார்.

2021-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் டுவைன் பிரிட்டோரியஸ் 9 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார். பேட்டிங்கில் 164.15 ஸ்டிரைக் ரேட்டுடன் 261 ரன்கள் சேர்த்தார். தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் டி 20 லீக்குகளில் டுவைன் பிரிட்டோரியஸ் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், தி ஹண்ட்ரடு தொடரில் வெல்ஷ் ஃபையர், சிபிஎல் மற்றும் எஸ்ஏ 20 தொடரில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளில் டுவைன் பிரிட்டோரியஸ் இடம் பெற்றுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்