சிட்னி: ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
ஆஸ்திரேலியாவில் தென் ஆப்பிரிக்க அணி சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இவ்விரு அணிகளிடையிலான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி, சிட்னியில் நடைபெற்று வந்தது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 131 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 475 ரன்கள் குவித்தது. 3-வது நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.
4-வது நாள் ஆட்டத்தின்போது இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக ஆஸ்திரேலியா அறிவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு149 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் நேற்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
220 ரன்கள் பின்தங்கியதால் ஃபாலோ-ஆன் பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது. 2 விக்கெட்கள் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 5-ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா, தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 mins ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago