சிட்னி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 475 ரன்கள் குவித்தது. உஸ்மான் கவாஜா இரட்டை சதத்தை நெருங்கும் நிலையில் ஸ்டீவ் ஸ்மித்தும் சதம் விளாசி அசத்தினார்.
சிட்னியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 47 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. டேவிட் வார்னர் 10, மார்னஸ் லபுஷேன் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். உஸ்மான் 54 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து விளையாடியது.
கவாஜாவுடன் இணைந்த ஸ்டீவ் ஸ்மித் இன்னிங்ஸை கட்டமைத்தார். கவாஜா 206 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் தனது 13-வது சதத்தை விளாசினார். அதேவேளையில் தனது 30-வது சதத்தை கடந்த ஸ்டீவ் ஸ்மித் 192 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் எடுத்த நிலையில் கேசவ் மகராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.
3-வது விக்கெட்டுக்கு கவாஜா, ஸ்மித் ஜோடி 377 பந்துகளில் 209 ரன்கள் சேர்த்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய டிரெவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடினார். 59 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் சேர்த்த அவர், ரபாடா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு கவாஜாவுடன் இணைந்து டிரெவிஸ் ஹெட் 117 பந்துகளில் 112 ரன்கள் சேர்த்தார்.
நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 131 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 475 ரன்கள் குவித்தது. உஸ்மான் கவாஜா 368 பந்துகளில், ஒரு சிக்ஸர், 19 பவுண்டரிகளுடன் 195 ரன்களும், மேட் ரென்ஷா 5 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தப்பித்த கவாஜா: ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா 119 ரன்கள் சேர்த்திருந்த போது கொடுத்த கேட்ச்சை அன்ரிச் நார்ட்ஜ் தவறவிட்டார். இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட கவாஜா இரட்டை சதத்தை நெருங்க ஆயத்தமாக உள்ளார். இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் கவாஜா இரட்டை சதம் விளாசக்கூடும்.
பிராட்மேனை முந்தினார்.. சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் சதம் விளாசினார். இது அவருக்கு 30-வது சதமாக அமைந்தது. இதன் மூலம் 29 சதங்கள் விளாசியிருந்த ஜாம்பவான் டான் பிராட்மேனின் சாதனையை கடந்தார். அதேவேளையில் ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் மைக்கேல் கிளார்க்கை பின்னுக்குத்தள்ளி 4-வது இடத்தை பிடித்தார் ஸ்மித். 92-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ஸ்மித் 60.89 சராசரியுடன் இதுவரை 8,647 ரன்கள் குவித்துள்ளார். முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் 115 போட்டிகளில் 8,643 ரன்கள் சேர்த்திருந்தார். இந்த வகையில் ரிக்கி பாண்டிங் 13,378 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
மழை காரணமாக மூன்றாவது நாள் ஆட்டம் துவாங்குவதில் இப்போது சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago