சர்வதேச அளவில் சிறந்த தடகள வீரருக்கான விருதை ஜமைக்காவின் உசேன் போல்ட் 6-வது முறையாக வென்றார்.
சர்வதேச தடகள கூட்டமைப்பு சார்பில் ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா மொனாக்கோவில் நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் ரியோ ஒலிம்பிக்கில் 3-வது முறையாக ஹாட்ரிக் தங்கம் வென்று புதிய வரலாறு படைத்த ஜமைக்காவின் உசேன் போல்ட் சிறந்த வீரருக்கான விருதை வென்றார்.
இதேபோல் ரியோ ஒலிம்பிக்கில் மகளிர் பிரிவு 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் சாதனை படைத்த எத்தியோப்பியாவின் அயானா சிறந்த வீராங்கனைக்கான விருதை பெற்றார்.
மின்னல் வேக மனிதராக வர்ணிக்கப்படும் உசேன் போல்ட் இந்த விருதை பெறுவது 6-வது முறையாகும். முன்னதாக இவர் இந்த விருதை கடந்த 2008, 2009, 2011, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் கைப்பற்றியுள்ளார்.
30 வயதான உசேன் போல்ட் கூறும்போது, ‘‘எனது இறுதி சீசனில் 200 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்கும் திட்டம் இல்லை. 200 மீட்டர் ஓட்டத்தை 19.19 விநாடிகளில் கடந்து ஏற்கெனவே சாதனை படைத்துள் ளேன். ரியோ ஒலிம்பிக்கில் 200 மீட்டர் ஓட்டத்தை 19 விநாடிகளில் கடக்க திட்டமிட்டேன்.
ஆனால் எனது கால்கள் அதற்கு ஒத்துழைக்கவில்லை. தற்போதைய நிலையில் 200 மீட்டர் ஓட்டத்தில் புதிய சாதனை படைப்பது கடினம். மேலும் தடகள வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் அதிகப்படியாக முயற்சி செய்யவும் நான் விரும்பவில்லை.
100 மீட்டர் ஓட்டத்தில் 9.58 விநாடிகள் சாதனையை முறியடிப்பீர்களா என்ற கேள்வியும் என்னிடம் கேட்கப்படுகிறது. காயமின்றி நான், களமிறங்கினால் எதுவும் சாத்தியப்படும். 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் நிச்சயம் களமிறங்கமாட்டேன். எனது பயிற்சியாளர் கூட ஓய்வு பெற வேண்டாம். மீண்டும் விளையாட்டுக்கு திரும்பு என்று கூறினார்.
ஆனால் ஓய்வு முடிவில் உறுதி யாக இருக்கிறேன். நான் தற்பெருமை கொள்ளவில்லை. 30 வயது ஓய்வு பெறக்கூடியது அல்ல என மக்கள் நினைக்கிறார்கள். என்னை பொறுத்தவரை நான் அனைத்தையும் செய்து முடித்து விட்டேன்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago