இந்திய தொடரில் இருந்து நியூஸி., வீரர் மில்னே விலகல்

By செய்திப்பிரிவு

வெலிங்டன்: நியூஸிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிவடைந்ததும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து நியூஸிலாந்து அணியானது இந்தியாவுக்கு வருகை தந்து 3 ஒருநாள் போட்டி, 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் ஜனவரி 18-ம் தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் கலந்து கொள்ளும் நியூஸிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னேவும் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் இந்தத் தொடர்களில் இருந்து ஆடம் மில்னே விலகி உள்ளார்.

இந்த இரு தொடர்களிலும் 16 நாட்களில் 6 ஆட்டங்களில் பங்கேற்க வேண்டும், இதற்கு தகுந்த அளவில் தயாராகவில்லை என்பதால் விலகுவதாக நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் ஆடம் மில்னே தெரிவித்தார். இதை வாரியமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஆடம் மில்னேவுக்கு பதிலாக பிளேர் டிக்னர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்