உலகக் கோப்பையை வெல்வதே எனது புத்தாண்டு தீர்மானம்: இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா

By செய்திப்பிரிவு

மும்பை: உலகக் கோப்பையை வெல்வதே தனது புத்தாண்டு தீர்மானம் என இலங்கை டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி நாளை இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளது.

“கடந்த ஆண்டு நாங்கள் டி20 உலகக் கோப்பையை வெல்ல விரும்பினோம். ஆனால், அது கைகூடவில்லை. நான் எனது கிரிக்கெட் கெரியரில் எதுவும் பெரிதாக சாதித்தது இல்லை. சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. அதனால் உலகக் கோப்பையை வெல்வதுதான் எனது புத்தாண்டு தீர்மானமாக கொண்டுள்ளேன்.

இதைவிட சிறந்தவொரு தீர்மானம் இருக்க முடியாது என நான் நினைக்கிறேன். உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது எங்கள் எண்ணம். அதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வோம். களத்தில் முழு அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவோம்” என பாண்டியா பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுடன் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. தொடர்ந்து பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் வாக்கில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்