ஐபிஎல் 2023 சீசனில் பங்கேற்க பிரதான இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ கட்டுப்பாடு?

By செய்திப்பிரிவு

மும்பை: எதிர்வரும் ஐபிஎல் 2023 சீசனில் இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான வீரர்கள் பங்கேற்பதில் புதிய சிக்கல் உருவாகி உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த முறை இந்த சிக்கலுக்கு பிசிசிஐ காரணம் என்றும் இது ஃபிரான்சைஸ் அணிகளுக்கு புதிய தலைவலியாக அமையலாம் எனவும் சொல்லப்படுகிறது.

எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இந்த தொடருக்கு தயாராகும் வகையில் சுமார் 20 வீரர்கள் அடங்கிய உத்தேச பட்டியலை பிசிசிஐ தயார் செய்துள்ளது. இந்த பட்டியலில் உள்ள வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் சுழற்சி முறையில் வாய்ப்பு வழங்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படுவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற ரிவ்யூ கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என தெரிகிறது. அது தவிர வீரர்களின் உடற்திறனை உறுதி செய்யும் வகையில் மீண்டும் யோ-யோ சோதனை மற்றும் டெக்ஸா ஸ்கேன் போன்ற சோதனைகளில் தேரும் வீரர்களுக்கு மட்டுமே அணியில் வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிகிறது. கடந்த ஆண்டு முக்கிய தொடர்களை இந்திய அணியின் பிரதான வீரர்கள் காயம் காரணமாக மிஸ் செய்திருந்தனர். அதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடும் பிரதான இந்திய வீரர்களின் பணிச்சுமையை பிசிசிஐ கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதாக தெரிகிறது. அதனால் ஃபிரான்சைஸ்களுடன் தேசிய கிரிக்கெட் அகாடமியும் இணைந்து இந்த வீரர்களை கண்காணிக்க உள்ளதாம்.

இதன் மூலம் ஐபிஎல் சீசனின் போது வீரர்களின் உடற்திறன், மன அழுத்தம் மற்றும் பணிச்சுமை போன்றவை கண்காணிக்கப்பட்டு அதற்கு ஏற்றார் போல திட்டங்கள் இருக்குமாம். ஆனால், இது குறித்து பிசிசிஐ தரப்பில் இதுவரை ஃபிரான்சைஸ்களுக்கு முறையான தகவல் எதுவும் சொல்லப்படவில்லை எனத் தெரிகிறது. பேட்ஸ்மேன்களை காட்டிலும் பவுலர்கள் மீது இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்கும் எனத் தெரிகிறது. 2021-22 சீசனில் மட்டுமே 70 வீரர்கள் காயம் காரணமாக தேசிய கிரிக்கெட் அகாடமியை அணுகியுள்ளனர். அதில் 23 பேர் சீனியர் ஆடவர் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்