ரிஷப் பந்த் உடல்நிலையில் முன்னேற்றம்

By செய்திப்பிரிவு

டேராடூன்: கார் விபத்தில் காயமடைந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பந்த்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், அதிரடி ஆட்டக்காரருமான ரிஷப் பந்த் 3 நாட்களுக்கு முன்பு காலை டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் தனியாக காரில் பயணித்த போது சாலைத் தடுப்பில் கார் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர், உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பந்தின் நெற்றியில் 2 இடங்களில் பலத்தகீறல் ஏற்பட்டுள்ளது. வலது முழங்காலில் தசைநார் கிழிந்துள்ளது. வலது மணிக்கட்டு, கணுக்கால், கால் விரலில் காயமும் முதுகில் சிராய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் சர்ஜரி

காயத்திலிருந்து அவர், முழுமையாக குணமடைய 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகும் என கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

காயமடைந்துள்ள ரிஷப் பந்த்துக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. விபத்தின்போது அவரது இடது கண் புருவத்தின் கீழ் வெட்டு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் பிளாஸ்டிக் சர்ஜரி வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. சிகிச்சைக்குப் பின்னர் அவர் நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்க (டிடிசிஏ) நிர்வாகிகள், மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்த்தனர்.

டிடிசிஏ இயக்குநர் ஷியாம் சர்மா கூறும்போது, “அவர் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார். இடது புருவத்தின் கீழே அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ டாக்டர்களும், மேக்ஸ் மருத்துவமனை டாக்டர்களுடன் அடிக்கடி தொடர்புகொண்டு பேசி வருகின்றனர். பிசிசிஐ செயலரும், நிலைமையை கண்காணித்து வருகிறார். இப்போதுள்ள நிலையில், ரிஷப் பந்த்தை டேராடூனிலிருந்து மாற்றும் திட்டமில்லை” என்றார்.

சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பந்த்தை, பாலிவுட் நடிகர்கள் அனுபம் கெர், அனில் கபூர், கிரிக்கெட் வீரர் நிதீஷ் ராணா உள்ளிட்டோரும் மருத்துவமனையில் சென்று பார்த்தனர்.

போக்குவத்து ஊழியர்களுக்கு கவுரவம்

விபத்தின்போது ரிஷப் பந்த்தை காப்பாற்றிய உத்தராகண்ட் போக்குவரத்துக் கழக ஊழியர்களை கவுரவிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியதாவது: ரிஷப் பந்த்துக்கு உதவி செய்த போக்குவரத்துக் கழக டிரைவர் சுஷீல் குமார், நடத்துநர் பரம்ஜீத் ஆகியோரை வரும் குடியரசு தின விழாவின்போது கவுரவிக்க அரசு முடிவு செய்துள்ளது. ரிஷப் பந்த்தை காப்பாற்ற 2 பேரும், தங்களது உயிரை பணயம் வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள ரிஷப் பந்த்தை முதல்வர் புஷ்கர் தாமி சந்தித்தார். பின்னர் டாக்டர்களிடம் அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்