புதுடெல்லி: டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியில் யுவேந்திர சஹல் விளையாடியிருந்தால் நிச்சயம் அதிக தாக்கத்தை ஏற்படுத்திருப்பார் என்று இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் கூறினார்.
கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அரை இறுதியில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு வெளியேறியது.
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது. அப்போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சஹலுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்கு சில போட்டிகளில் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தால் ஆட்டத்தின் போக்கையே அவர் நிச்சயம் மாற்றியிருப்பார் என்று பல்வேறு கலவையான விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், சஹலை இந்திய அணியின் விளையாடும் லெவனில் தேர்வு செய்திருந்தால் சுவாரஸ்யமான தேர்வாக இருந்திருக்கும் என இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
அணியின் தேர்வு என்பது கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள், வீரர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பொறுத்து அமையும். கடந்த டி20 உலகக் கோப்பையில், இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆரம்ப கட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடினார்.
ஆனால் முடிவில் இவருடைய ஆட்டம் சிறப்பாக அமையவில்லை. ஆனால் யுவேந்திர சஹல் விளையாடியிருந்தால் நிச்சயம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார். மேலும் சஹல் நிச்சயம் இந்திய அணியின் சுவாரஸ்யமான தேர்வாகவும் இருந்திருப்பார். அவருக்கு ஆட்டங்கள் அமையவில்லை.
இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago