கவனமாக வண்டியை ஓட்டு - ரிஷப் பந்தை அன்றே எச்சரித்த ஷிகர் தவான் | வைரல் வீடியோ

By செய்திப்பிரிவு

டேராடூன்: கார் ஓட்டுவது குறித்து இந்திய அணி வீரர் ரிஷப் பந்த்துக்கு மூத்த வீரர் ஷிகர் தவான் அறிவுரை கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் இன்று அதிகாலை டெல்லியிலிருந்து உத்தராகண்ட்டிற்கு தன் காரில் செல்லும்போது கோரமான விபத்தில் சிக்கினார். தனது மெர்சிடஸ் காரை ஓட்டிக் கொண்டு உத்தராகண்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது ரூர்கி அருகே அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி சாலைத் தடுப்பில் மோதித் தீப்பிடித்து எரிந்தது. எரியும் காரிலிருந்து முன்-கண்ணாடியை உடைத்துத் தீக்காயங்களுடன் தப்பியுள்ளார். எனினும், அவர் தலை, கால்கள் மற்றும் முதுகில் படுகாயங்கள் ஏற்பட்டன. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனையின் முடிவு வெளியாகி உள்ளது. அதில் அவரது மூளை மற்றும் முதுகுத்தண்டு நார்மலாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவருக்கு நெற்றியில் இரண்டு இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. வலது கால் மூட்டில் தசைநார் கிழிந்துள்ளது. அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால், கால் விரலிலும் காயம் ஏற்பட்டுள்ளது. முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளது என பிசிசிஐ தெரிவித்துள்ளது. அவர் விரைந்து குணம் பெற வேண்டி சக விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் தெரிவித்து வரும் இந்திய அணியின் மூத்த வீரர் சில காலங்கள் முன்பே பந்த்துக்கு கார் ஓட்டுவது குறித்து அறிவுரை தெரிவித்த வீடியோ வைரலாகி வருகிறது.

டெல்லி அணிக்காக விளையாடியபோது எடுத்த அந்த பழைய வீடியோவில், ஷிகர் தவானிடம், தனது ஏதாவது ஆலோசனை சொல்ல வேண்டும் எனக் கேட்கிறார் ரிஷப் பந்த். அதற்கு சற்றும் யோசிக்காமல், "நீ கவனமாக கார் ஓட்ட வேண்டும்" என்று அறிவுரை தெரிவிக்கிறார். இந்த வீடியோ பந்த் விபத்தில் சிக்கிய பிறகு வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்