ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பரிசுத் தொகை அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

மெல்பர்ன்: ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் வரும் ஜனவரி 13-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை மெல்பர்ன் நகரில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான பரிசுத் தொகையை போட்டி அமைப்பாளர்கள் நேற்று அறிவித்தனர். கடந்த ஆண்டைவிட 3.4 சதவீதம் பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடரின் மொத்த பரிசுத் தொகை இந்திய மதிப்பில் சுமார் ரூ.426.27 கோடியாகும்.

ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவர் தலா ரூ.16.56 கோடியை பரிசாக பெறுவார்கள். தகுதி சுற்றுடன் வெளியேறுபவர்களுக்கு ரூ.14.49 லட்சம் கிடைக்கும். அதேவளையில் மெயின் டிராவில் முதல் சுற்றுடன் வெளியேறுபவர்களுக்கு சுமார் ரூ.59 லட்சம் கிடைக்கும். கடந்த 20 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் பரிசுத் தொகை 321 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்