பாரிஸ்: கால்பந்து உலகக் கோப்பை தொடர் முடிந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் லீக் 1 தொடர் மீண்டும் துவங்கி உள்ளது. இந்தத் தொடரில் பிஎஸ்ஜி கிளப் அணிக்காக விளையாடும் நெய்மர் மற்றும் எம்பாப்பே என இருவரும் களத்திற்கு திரும்பியுள்ளனர். வரும் ஜனவரியில் இதே அணியில் மெஸ்ஸி இணைய உள்ளதாக தகவல்.
இந்தச் சூழலில் நேற்று ஸ்ட்ராஸ்பேர்க் அணியுடன் பிஎஸ்ஜி அணி விளையாடியது. இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது பிஎஸ்ஜி. எம்பாப்பே உட்பட அந்த அணி சார்பில் இரண்டு பேர் கோல் பதிவு செய்திருந்தனர். இந்தப் போட்டியில் ரெட் கார்டு வாங்கி வெளியேறினார் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மர்.
இந்தப் போட்டியின் 62-வது நிமிடத்தில் பெனால்டி ஏரியாவுக்குள் டைவ் அடித்த காரணத்தால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. அதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னர்தான் எதிரணியின் வீரரின் முகத்தில் அடித்திருந்தார். மீண்டும் ஃபவுல் செய்த காரணத்தால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. அதனால் நடுவருடன் வாதிட்டார். பின்னர் வெளியேறினார். அது களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
எமிலியானோ மார்டினஸ் குறித்து எம்பாப்பே: “எப்போது ஒரு பண்பான வீரராக நடந்து கொள்ள வேண்டும். அவரது கொண்டாட்டங்கள் எனது பிரச்சினை அல்ல. அதுபோன்ற அபத்தமான விஷயங்களில் நான் எனது சக்தியை வீணாக்குவதில்லை. உலகக் கோப்பை இறுதிப் போட்டி முடிந்த அடுத்த நொடியே மெஸ்ஸியை நான் வாழ்த்தி இருந்தேன்” என தெரிவித்துள்ளார்.
» ஜன.1-ல் ஓடிடியில் வெளியாகிறது ‘கட்டா குஸ்தி’
» தமிழகத்திலேயே முதன்முறையாக தஞ்சை - பாபநாசத்தில் வெல்லம் ஏலம்
உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி தங்கள் நாட்டில் வெற்றி உலா வந்தது. அப்போது அந்த அணியின் கோல்கீப்பர் மார்ட்டினஸ், எம்பாப்பேவின் முகம் பதித்த பொம்மை ஒன்றை கையில் வைத்திருந்தார். அது உலக அளவில் அதிர்வலைகளை எழுப்பியது.
நெய்மருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்ட வீடியோ லிங்க்..
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago