மும்பை: இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இந்தியாவில் இந்திய அணி விளையாடுகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான இந்திய அணி வீரர்களின் விவரங்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, சமீபத்தில் வங்கதேச தொடரில் கட்டைவிரல் காயத்தால் விளையாடாமல் இருந்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா காயத்தில் இருந்து மீண்டு வந்து மீண்டும் அணியை வழிநடத்த உள்ளார். என்றாலும் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டித் தொடருக்கே கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 10-ம் தேதி கவுகாத்தியில் தொடங்குகிறது. கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரம் மைதானங்களில் மீதமுள்ள இரு போட்டிகளில் நடக்கவுள்ளன.
தவான், பந்த் நீக்கம்; ஷமி ரிட்டர்ன்ஸ்: இந்திய அணியின் மூத்த வீரர் ஷிகர் தவான் ஒருநாள் தொடர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் அணியை வழிநடத்திய தவான் மோசமான பார்ம் காரணமாக அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டுள்ளார். அதேநேரம் விக்கெட் கீப்பர் பந்த்துக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்ச்சாளர் முகமது ஷமி காயத்தில் இருந்து குணமாகி அணிக்கு திரும்பியுள்ளார்.
இதனிடையே, ஒருநாள் தொடருக்கு கேப்டன் பொறுப்பேற்றுள்ள ரோஹித் சர்மா டி20 தொடரில் இடம்பெறவில்லை. மாறாக, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மீண்டும் அணியை வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை அரையிறுதி தோல்விக்குப் பிறகு நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் டி20 போட்டிகளில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியாவே கேப்டன் பொறுப்பை ஏற்று வழிநடத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக இலங்கை தொடருக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மும்பையில் ஜனவரி 3ம் தேதி தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து புனே மற்றும் ராஜ்கோட் ஆகிய இரு மைதானங்களில் நடக்கிறது.
» 2022-ல் கால்பந்து உலகில் அதிக கோல்களை பதிவு செய்த டாப் 5 வீரர்கள்
» 8.3 ஓவர்கள், 35 ரன்கள், 8 விக்கெட்டுகள்: தீபக் எனும் அசாத்திய பவுலர் - இது ரஞ்சிக் கோப்பை கெத்து!
ஷிவம் மாவி, முகேஷுக்கு அழைப்பு: உத்தரபிரதேச வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவி மற்றும் பெங்கால் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் ஆகியோர் முதல் முறையாக டி20 அணியில் இடம்பிடித்துள்ளனர். ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். ரிஷப் பந்த்துக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் டி20 அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன் அணிக்கு தேர்வாகியுள்ளார்.
டி20 போட்டிகளுக்கான இந்திய அணி விவரம்: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி, முகேஷ் குமார்.
ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி விவரம்: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப்யாதவ், அக்சர் படேல், முகமது. ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago