டேராடூன்: நடப்பு ரஞ்சிக் கோப்பை தொடரில் 8.3 ஓவர்களில் வெறும் 35 ரன்கள் மட்டுமே கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் உத்தராகண்ட் அணியை சேர்ந்த தீபக் தபோலா எனும் பவுலர். இமாச்சல் அணிக்கு எதிரான இன்னிங்ஸில் அவர் இந்த சாதனையை புரிந்துள்ளார். அந்த அணி 49 ரன்களில் அவுட் ஆகியுள்ளது.
இந்தியாவில் ரஞ்சிக் கோப்பை 2022-23 சீசன் கடந்த 13-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 38 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. 135 போட்டிகள் நடைபெறுகின்றன. ரவுண்ட் ராபின் மற்றும் குரூப் சுற்று என போட்டிகள் நடைபெறுகிறது.
இதில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இமாச்சல் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் அணிகளுக்கு இடையிலான குரூப் போட்டி டேராடூனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இமாச்சல் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால், அது தவறான முடிவு என்பதை எதிரணியின் 10 விக்கெட்டுகளில் 8 விக்கெட்டுகளை முதல் இன்னிங்ஸில் கைப்பற்றியதன் மூலம் தீபக் சொல்லியுள்ளார்.
இந்த இன்னிங்ஸில் மொத்தம் 8.3 ஓவர்கள் வீசி வெறும் 35 ரன்களை மட்டுமே கொடுத்து 8 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார். இதில் இரண்டு மெய்டன் ஓவர்கள் அடங்கும். இது அவரது தனிபட்ட இன்னிங்ஸ் சாதனையாகவும் உள்ளது. இதற்கு முன்னர் ஒரே இன்னிங்ஸில் அவர் 50 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
32 வயதான அவர் வலது கை பந்துவீச்சாளர். இதுவரை 14 முதல் தர போட்டிகள் மற்றும் 13 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி உள்ளார். 2018 சீசனில் அறிமுகமானார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago