சென்னை டெஸ்ட்: இங்கிலாந்து 477 ரன்கள் குவிப்பு; இந்தியா நிதான துவக்கம்

By கார்த்திக் கிருஷ்ணா

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னையில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியில், 2-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்களை எடுத்துள்ளது. முன்னதாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 477 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முரளி விஜய்க்கு பதிலாக களமிறங்கிய படேல்

இன்றைய நாளில் தேநீர் இடைவேளைக்குப் பின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 477 ரன்களைக் குவித்திருந்தது. இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக கே.எல்.ராகுல், பார்த்தி படேல் ஆகியோர் களமிறங்கினர். வழக்கமாக துவக்க ஆட்டக்காரராக களமிறங்கும் முரளி விஜய் ஃபீல்டிங் செய்த போது தோளில் ஏற்பட்ட காயத்தால் களமிறங்கவில்லை.

நிதானமாகவே ஆடத் தொடங்கிய இந்தியா 10 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதற்குப் பிறகு ஓவருக்கு சராசரியாக 4 ரன்களுக்கு குறையாமல் சேர்த்து, ஆட்ட நேர முடிவில் 60 ரன்களை விக்கெட் இழப்பின்றி சேர்த்திருந்தது. ராகுல் 30 ரன்களுடனும், படேல் 28 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்தை விட இந்தியா 417 ரன்கள் பின்தங்கியுள்ளது.

கலக்கத்துடன் துவங்கிய இங்கிலாந்து

முன்னதாக, இன்றைய ஆட்டத்தில் 284 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற நிலையில் தங்களது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி நாளின் முதல் ஓவரிலேயே ஸ்டோக்ஸை அஸ்வினின் சுழலுக்கு இழந்தது.

அடுத்து ஆட வந்த பட்லர் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் இஷாந்த் சர்மா வேகத்தில் வீழ்ந்தார். நேற்றைய போட்டியில் சதம் அடித்து ஆட்டமிழக்காமல் ஆடி வந்த மோயின் அலியும் 146 ரன்களில் ஆட்டமிழந்தார். 321 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் என்ற நிலைக்கு இங்கிலாந்து தள்ளப்பட்டது.

அரை சதம் கடந்த அறிமுக வீரர்

தொடர்ந்து களத்தில் இருந்த ரஷீத் மற்றும் டாசன் இருவரும் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். உணவு இடைவேளையைக் கடந்து இந்த ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. 140 பந்துகளில் 46 ரன்க்ள் எடுத்திருந்த ரஷீத் ஒரு பவுண்டரி அடித்து அரை சதத்தை எட்டினார்155 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்த ரஷீத் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரஷீதும் டாசனும் பார்ட்னர்ஷிப்பில் 108 ரன்களைக் சேர்த்திருந்தனர்.

ரஷீத் ஆட்டமிழந்த அடுத்த ஓவரில், அறிமுக வீரர் டாசன் 121 பந்துகளில் அரை சதம் எட்டினார். அடுத்து களமிறங்கிய பிராடும் ரன் சேர்க்க இந்திய பந்துவீச்சின் உத்திகள் அனைத்தும் வீணாகின. தேநீர் இடைவேளைக்குப் பிறகு பிராட் 19 ரன்களில் ரன் அவுட்டாக, கடைசியாக ஆடவந்த பால், 12 ரன்களுக்கு மிஷ்ராவின் பந்தில் ஆட்டமிழந்தார். அறிமுக வீரர் டாசன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 66 ரன்களை எடுத்திருந்தார்.

இந்திய தரப்பில் அதிகபட்சமாக, ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்