மெல்பர்ன்: 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி சாதனை படைக்க காத்திருக்கிறார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்.
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ம் தேதி மெல்பர்ன் மைதானத்தில் தொடங்கவுள்ளது. கிறிஸ்துமஸ் தினத்துக்கு மறுநாள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகள் என்று அழைக்கப்படுகின்றன. அதன்படி இந்த டெஸ்டும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக அமைகிறது.
இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் டேவிட் வார்னருக்கு இந்த போட்டி 100-வது டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது.
இதுகுறித்து மெல்பர்னில் டேவிட் வார்னர் கூறும்போது, “இது எனக்கு 100-வது டெஸ்ட் போட்டியாக அமைவது மகிழ்ச்சி. நான் ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பொறுப்பேற்பதற்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் (சிஏ) தடை இன்னும் அமலில் உள்ளது. இதற்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்புதான் பதில் சொல்லவேண்டும்" என்றார்.
» வங்கதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்டில் தடுமாறும் இந்திய அணி - வெற்றிக்கு 100 ரன்கள் தேவை
» IPL 2023 ஏலம் | முத்திரை பதித்த வீரர்கள் - ஐபிஎல் ஏலத்தின் முழு பட்டியல்
இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வார்னர் 7,922 ரன்கள் குவித்துள்ளார். இதில் 24 சதங்களும், 34 அரை சதங்களும் அடங்கும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago