பியூனஸ் அயர்ஸ்: அர்ஜெண்டினா கால்பந்து தேசிய அணிக்காக தொடர்ந்து விளையாட அந்த அணி வீரர் ஏஞ்சல் டி மரியா முடிவு செய்துள்ளார்.
அண்மையில் கத்தாரில் முடிவடைந்த உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்த போட்டியில் மெஸ்ஸி 2 கோல்களும், டி மரியா ஒரு கோலும் அடித்தனர்.
உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக டி மரியா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அர்ஜெண்டினா உலகக் கோப்பையை வென்றதைத் தொடர்ந்து தனது ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டுள்ளார் ஏஞ்சல் டி மரியா. அவர் கூறும்போது, “எனக்கு இப்போது 34 வயதாகிறது. உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற முடிவு செய்திருந்தேன். இப்போது எனது முடிவை மாற்றிக் கொண்டேன். 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள கோபா அமெரிக்கா போட்டி வரை விளையாடுவேன்” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago