பாகிஸ்தான் தேர்வுக் குழு தலைவராக அப்ரிடி தேர்வு

By செய்திப்பிரிவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தேசிய தேர்வுக் குழு இடைக்காலத் தலைவராக முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவராக இருந்த ரமீஸ் ராஜா அண்மையில் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து நேற்று ஷாகித் அப்ரிடி தேர்வுக் குழுவின் இடைக்காலத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அப்துல் ரசாக், ராவ் இப்திகார், அஞ்சும் உள்ளிட்டோர் அடங்கிய தேர்வுக்குழுவை அப்ரிதி வழிநடத்துவார். மேலும் தேர்வுக்குழுவுக்கு ஹாரூன் ரஷித் ஒருங்கிணைப்பாளராக இருப்பார்.

தேர்வுக் குழு இடைக்காலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டது குறித்து ஷாகித் அப்ரிடி கூறியதாவது: எனக்கு மதிப்பளித்து இந்தப் பொறுப்பை வழங்கியது தொடர்பாக நான் பெருமை கொள்கிறேன். எனது திறமையின் மூலம் இந்தப் பணியைச் சிறப்பாக செய்வேன். பாகிஸ்தான் அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்