IPL 2023 ஏலம் | இங்கிலாந்தின் சேம் கரண் ரூ.18.5 கோடிக்கு ஏலம் - முழு விவரம்

By செய்திப்பிரிவு

கொச்சி: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலத்தில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான சேம் கரணை ரூ.18.50 கோடிக்கு வாங்கியது பஞ்சாப் கிங்ஸ் அணி. இதன் மூலம் மினி ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் சேம் கரண்.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 16-வது சீசனுக்கான மினி வீரர்கள் ஏலம் கொச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான சேம் கரணை ரூ. ரூ.18.50 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. இதன் மூலம் மினி ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் சேம் கரண். இதற்கு முன்னர் கடந்த 2021-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் கிறிஸ்மோரிஸை ராஜஸ்தான் அணி ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது.

சேம் கரண் கடந்த மாதம் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் 13 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார். இதில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர், கைப்பற்றிய 3 விக்கெட்களும் அடங்கும். சேம் கரணை மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ ஆகிய அணிகளும் ஏலம் எடுக்க ஆர்வம் காட்டியிருந்தன. 2019-ம் ஆண்டு சேம் கரணை ரூ.7.20 கோடிக்கு வாங்கியிருந்த பஞ்சாப் அணி தற்போது அவருக்காக ரூ. ரூ.18.50 கோடியை செலவிட்டுள்ளது. சேம் கரண் 2020, 2021-ம் ஆண்டுகளில் சிஎஸ்கேவுக்காக விளையாடி இருந்தார். இந்த ஆண்டு காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியிருந்தார்.

இங்கிலாந்து அணியின் மற்றொரு ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.16.25 கோடிக்கு ஏலம்எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி இவ்வளவு பெரியதொகைக்கு வீரரை ஒரு ஏலம் எடுப்பது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் தீபக் ஷாகரை அந்த அணி ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது. தோனிக்கு பின்னர் சென்னை அணியை வழிநடத்தும் நோக்கில் பென் ஸ்டோக்ஸ் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீனை மும்பை இந்தியன்ஸ் ரூ.17.50 கோடிக்கு வாங்கியது. இதன் மூலம் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட 2-வது வீரர் ஆனார் கேமரூன் கிரீன்.டெல்லி அணி ரூ.15 கோடி வரைகேமரூன் கிரீனை ஏலம் எடுக்க மல்லுக்கட்டியது. ஆனால் மும்பைஇந்தியன்ஸ் அந்த தொகையைவிட அதிக விலைக்கு ஏலம் எடுத்தது. மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரனை ரூ.16 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ அணி. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகதொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார் நிக்கோலஸ் பூரன்.

நியூஸிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசனை ரூ.1கோடிக்கும், இந்தியாவின் அஜிங்க்ய ரஹானேவை ரூ.50 லட்சத்துக்கும், ஆல்ரவுண்டர் நிஷாந்த் சிந்துவை ரூ.60 லட்சத்துக்கும் ஷேக் ரஷீத், அஜய் மண்டல்,பகத் வர்மா ஆகியோரை தலா ரூ.20 லட்சத்துக்கும் ஏலம் எடுத்தது சிஎஸ்கே அணி.

டெல்லி அணி இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமாரை ரூ.5.50 கோடிக்கும், மணீஷ் பாண்டேவை ரூ.2.40 கோடிக்கும், இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஃபில் சால்ட்டை ரூ.2கோடிக்கும், இஷாந்த் சர்மாவை ரூ.50 லட்சத்துக்கும் ஏலம் எடுத்தது. குஜராத் அணி இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவியை ரூ.6 கோடிக்கும், அயர்லாந்தின் ஜோஷ்வா லிட்டிலைரூ.4.40 கோடிக்கும், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சனை ரூ.2 கோடிக்கும், கே.எஸ்.பரத்தைரூ.1.20 கோடிக்கும், மேற்கிந்தியத் தீவுகளின் ஓடியன் ஸ்மித்தை ரூ.50 லட்சத்துக்கும், மொஹித் சர்மாவை ரூ.50 லட்சத்துக்கும், உர்வில் படேலை ரூ.20 லட்சத்துக்கும் ஏலம் எடுத்தது.

கொல்கத்தா அணியானது தென்ஆப்பிரிக்காவின் டேவிட் வைஸைரூ.1 கோடிக்கும், தமிழகத்தின் நாராயண் ஜெகதீசை ரூ.90 லட்சத்துக்கும், வைபவ் அரோராவை ரூ.60 லட்சத்துக்கும், சுயாஷ் சர்மா, குல்வந்த் கெஜ்ரோலியா ஆகியோரை தலா ரூ.20 லட்சத்துக்கும் ஏலம் எடுத்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியானது ஆஸ்திரேலியாவின் ரிச்சர்ட்சனை ரூ.1.50 கோடிக்கும், பியூஸ் சாவ்லாவை ரூ.50 லட்சத்துக்கும், டுவான் ஜேன்சன், ஷம்ஸ் முலானி, நேஹால் வதேரா, விஷ்ணு வினோத் ஆகியோரை தலா ரூ.20 லட்சத்துக்கும் ஏலம் எடுத்தன.

பஞ்சாப் அணியானது ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசாவை ரூ.50 லட்சத்துக்கும், ஹர்பிரீத் பாட்டியாவை ரூ.40 லட்சத்துக்கும், வித்வத் கவேரப்பா, ஷிவம் சிங், மோஹித் ரதீ ஆகியோரை தலாரூ.20 லட்சத்துக்கும் ஏலம் எடுத்தன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது மேற்கிந்தியத் தீவுகளின் ஜேசன் ஹோல்டரை ரூ.5.75 கோடிக்கும், தென் ஆப்பிரிக்காவின் டோனோவன் ஃபெரேராவை ரூ.50லட்சத்துக்கும், குணால் ரத்தோரை ரூ.20 லட்சத்துக்கும் ஏலம் எடுத்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது இங்கிலாந்தின் வில் ஜேக்ஸை ரூ.3.20 கோடிக்கும், ரீஸ் டாப்லேவை ரூ.1.90 கோடிக்கும், இந்திய வேகப்பந்து வீச்சாளர்ராஜன் குமாரை ரூ.70 லட்சத்துக்கும், அவினாஷ் சிங்கை ரூ.60 லட்சத்துக்கும், சோனு யாதவ், மனோஜ் பந்தகே, ஹிமான்ஷு சர்மா ஆகியோரை தலா ரூ.20 லட்சத்துக்கும் ஏலம் எடுத்தது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது இங்கிலாந்தின் ஹாரி புரூக்கை ரூ.13.25 கோடிக்கும், மயங்க் அகர்வாலை ரூ.8.25 கோடிக்கும், தென் ஆப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசெனை ரூ.5.25 கோடிக்கும், இந்திய ஆல்ரவுண்டரான விவ்ராந்த் சர்மாவை ரூ.2.60 கோடிக்கும், இங்கிலாந்தின் ஆதில் ரஷித்தை ரூ.2 கோடிக்கும், இந்தியஆல்ரவுண்டரான மயங்க் தாகரைரூ.1.80 கோடிக்கும், மயங்க் மார்கண்டேவை ரூ.50 லட்சத்துக்கும், உபேந்திரா சிங் யாதவை ரூ.25 லட்சத்துக்கும், நிதிஷ் குமார் ரெட்டி, சமர்த் வியாஷ், சன்விர் சிங் ஆகியோரை தலா ரூ.20 லட்சத்துக்கும் ஏலம் எடுத்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்