கத்தார்: உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி நிகழ்வில், கருப்பு நிற அங்கி ஒன்றை அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸிக்கு கத்தார் மன்னர் அணிவித்தது உலக அளவில் பேசும்பொருளானது.
ஃபிஃபா 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 36 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் அர்ஜென்டினா வாகை சூடியுள்ளது. அந்த அணி உலகக் கோப்பையை வெல்வது இது 3-வது முறையாகும். அர்ஜென்டினாவின் வெற்றியை உலக முழுவதிலும் உள்ள மெஸ்ஸி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதற்கிடையில், உலகக் கோப்பை வழங்கும் இறுதி நிகழ்வில், கருப்பு நிற அங்கி போன்ற ஆடையை கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி, அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு அணிவிப்பார். இந்த ஆடையை அணிந்துதான் உலகக் கோப்பையை மெஸ்ஸி பெறுவார். இந்த நிலையில், பலரும் இந்த ஆடை குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தனர். ஏன் அர்ஜென்டினா ஆடையை அணிந்து மெஸ்ஸி உலகக் கோப்பையை பெறவில்லை என்று பலரும் குழப்பி இருந்தனர்.
» வானிலை முன்னறிவிப்பு | டிச.23-ல் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
» கொஞ்சம் technique கொஞ்சம் English - 106: இணைக்கும் சொற்கள் ரொம்ப முக்கியம்!
இந்தக் குழப்பத்துக்கு இப்போது தெளிவு கிடைத்துள்ளது. மெஸ்ஸிக்கு கத்தார் மன்னர் அணிவித்த அந்த அங்கியை அரபில் பிஷ்ட் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆடை போருக்கு செல்லும் அரபு வீரர்கள் வெற்றிக்கு பின் அணிவார்கள் (இந்த ஆடை ஓட்டகத்தின் முடி & ஆட்டுத் தோலினால் செய்யப்படுவது) . அதன் பொருட்டே மரியாதைக்குரிய வகையில் இதனை மெஸ்ஸிக்கு கத்தார் மன்னர் அணிவித்துள்ளார். இந்த வகையான ஆடை அரபு நாடுகளின் பாரம்பரியமாக கருதப்படுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago