பிரான்ஸ் அணிவீரர் டிபன்டரான தியோ ஹெர்னாண்டஸ் கூறும்போது, “எங்கள் அணிக்காக தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை வென்று கொடுக்க விரும்புகிறோம். லயோனல் மெஸ்ஸியை கண்டு எங்களுக்கு அச்சமில்லை. அவரைக் கண்டு நாங்கள் பயப்படப் போவதில்லை. அவரை தடுத்து நிறுத்த அனைத்தையும் செய்வோம். அர்ஜெண்டினா களத்தில் நம்ப முடியாத அணியாக உள்ளது. அதை வீழ்த்த நாங்கள் தயாராக உள்ளோம்” என்றார்.
பிரான்ஸ் அணியின் முன்கள வீரர் ஆலிவர் ஜிரவுடு கூறும்போது, “மெஸ்ஸியை தடுத்து நிறுத்த தனி திட்டம் எதுவும் வகுக்கவில்லை. ஆனால் ஒரு அணியாக இதை நாங்கள் செய்வோம். மெஸ்ஸி ஒருமிகச் சிறந்த வீரர். ஆனால் இறுதிப் போட்டி இரவை அவர் மகிழ்ச்சியுடன் கொண்டாட நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை. நாங்கள் மீண்டும் ஒரு உலகக் கோப் பையை வெல்ல விரும்புகிறோம். அதற்காக எதையும் செய்வோம். மெஸ்ஸியை தடுத்து நிறுத்த எங்களால் முடிந்தத் திட்டங்களைச் செய்ய முயற்சிப்போம். ஆனால் மெஸ்ஸி மட்டுமே அர்ஜெண்டினா அணி அல்ல. அந்த அணியில் மிகச் சிறந்த வீரர்கள் மேலும் பலர் உள்ளனர். அதனால் தான் அவர்கள் மிகவும் வலுவான அணியாக இந்த உலகக் கோப்பையில் உள்ளனர்” என்றார்.
‘மெஸ்ஸிக்கு எதிராக விளையாடுவது சவால்’: பிரான்ஸ் அணியின் முன்கள வீரர் அன்டோனி கிரீஸ்மான் கூறும்போது, “உலகக் கோப்பையை வெல்வது என்பது எளிதான விஷயம் கிடையாது. அதுவும், அர்ஜெண்டினாவின் கேப்டன் மெஸ்ஸிக்கு எதிராக விளையாடுவது சவாலான விஷயம்தான். இந்த உலகக் கோப்பை தொடரில் அர்ஜெண்டினா விளையாடிய அனைத்து ஆட்டங்களையும் நாங்கள் பார்த்தோம். அவர்கள் மிகவும் கடினமானவர்கள். அர்ஜெண்டினா அணி என்பது மெஸ்ஸி மட்டுமே கிடையாது. அவரை சுற்றிலும் மிகவும் பலமான வீரர்கள் உள்ளனர். இது எங்களுக்கு கடினமான ஆட்டமாக இருக்கும். மெஸ்ஸியை நாங்கள் சமாளிப்போம். அதற்காக தயாராக உள்ளோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago