இந்தியா சிமென்ட்ஸ் புரோ லீக் நாளை தொடக்கம்: சிவில் இன்ஜினீயர்கள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

சென்னை: `இந்தியா சிமென்ட்ஸ் புரோ லீக்' என்ற பெயரில் சிவில் இன்ஜினீயர்களுக்காக தமிழக அளவிலான கிரிக்கெட் போட்டிநாளை (டிச.17) தொடங்கஉள்ளது.

இதுகுறித்து இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் முழுவதும் உள்ள சான்றிதழ் பதிவு பெற்ற சிவில் இன்ஜினீயர்கள் தங்களின் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தும் வகையில் இந்தியா சிமென்ட்ஸ் புரோ லீக் (ஐசிபிஎல்) கிரிக்கெட் போட்டி நாளை தொடங்கவுள்ளது.

48 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி பல்வேறு மாவட்டங்களில் உள்ள விளையாட்டு மைதானங்களில் நடைபெற உள்ளது. இறுதிப் போட்டி சென்னையில் நடக்கவுள்ளது.

முதல்கட்ட போட்டிகள் டிச.17 முதல் ஜன.8-ம் தேதி வரை கோவை, சேலம், திருச்சி, மதுரை, வேலூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடைபெறும். ஒரு குழுவுக்கு 6 அணிகள் வீதம் 8 குழுக்கள் இதில் பங்கேற்கும். ஒவ்வோர் அணியும் 2 லீக் போட்டிகளில் விளையாடும். ஒவ்வொரு குழுவிலும் ஒரு வெற்றிபெற்ற அணி தேர்வு செய்யப்படும். பின்னர் கால் இறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டிகள் சென்னையில் நடத்தப்படும்.

சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த மட்டையாளர், இறுதிப்போட்டியின் சிறந்த வீரர், மொத்த போட்டியின் சிறந்த வீரர் ஆகிய சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும். இதில் பங்கேற்கும் அணிகளுக்குக் கட்டணம் எதுவும் இல்லை. டென்னிஸ் பந்தில்தான் விளையாட்டு நடைபெறும். ஒரு நாளைக்கு 4 போட்டிகள் நடத்தப்படும்.

இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கான பரிசுக்கோப்பை, சிறப்பு ஆடை நேற்றுமுன்தினம் (டிச.14) சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியா சிமென்ட்ஸ்துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் என்.நிவாசன், தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி பார்த்தசாரதி ராமானுஜம், தமிழ்நாடு விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் எஸ்.நடேஷ், சந்தைப்படுத்தல் மற்றும் சானல் வளர்ச்சிதலைவர் ஷஷாங்க் சிங், இந்திய கிரிக்கெட் வீரரும் டிஎன்பிஎல் வேகப்பந்து வீச்சாளருமான டி.நடராஜன், தமிழகம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்