ஆஸி.யை அச்சுறுத்த நியூஸி. அணியில் மணிக்கு 150 கிமீ-வேகத்துக்கு மேல் வீசும் லாக்கி பெர்குசன்

By இரா.முத்துக்குமார்

சமீப காலங்களில் அதிவேக பந்து வீச்சாளர்களை அதிகம் கொண்டு வருவது நியூஸிலாந்து கிரிக்கெட் அணியே. ஆடம் மில்ன, ஹென்றி, தற்போது லாக்கி பெர்குசன். இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் தொடர் அணியில் தேர்வு செய்யப்பட்ட லாக்கி பெர்குசன், மணிக்கு 150 கிமீ வேகத்துக்கு மேல் வீசி வருவது குறிப்பிடத்தக்கது.

வரும் ஞாயிறன்று (டிச.4) சிட்னியில் பகலிரவு ஒருநாள் போட்டியுடன் தொடங்கும் இந்த சாப்பல்-ஹாட்லி டிராபிக்கான தொடர் 3 போட்டிகளைக் கொண்டது.

டிம் சவுதி, டிரெண்ட் போல்ட் மற்றும் சமீபமாக நுழைந்த அதிரடி ஆல்ரவுண்டர் கொலின் டி கிராண்ட்ஹோம் ஆகியோருடன் லாக்கி பெர்குசன் இணைந்து ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தவுள்ளனர். ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவில் 0-5 என்று ஒயிட்வாஷ் வாங்கிய பிறகு தற்போது நியூஸிலாந்துக்கு எதிராக இழந்த மதிப்பை மீட்க களமிறங்குகிறது. மேலும் தென் ஆப்பிரிக்காவின் ரபாடா ஆஸ்திரேலியாவின் வார்னர், ஸ்மித் உள்ளிட்டோரை தனது வேகத்தினால் அச்சுறுத்தியதையடுத்து லாக்கி பெர்குசன் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் ஊடுருவி திணறடிக்க நியூஸிலாந்து தேர்வுக்குழு முடிவெடுத்துள்ளது.

உள்நாட்டு பிளங்கெட் ஷீல்ட் போட்டிகளில் 25 வயதான இந்த வேகப்புயல் லாக்கி பெர்குசன் 5/101, 4/107, மற்றும் 6/89 என்று அசத்தியுள்ளார். மேலும் லிஸ்ட் ஏ போட்டிகளில் 16 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார்.

இவரது வேகம் பற்றி குறிப்பிட்ட நியூஸிலாந்து அணித்தேர்வாளர் கெவின் லார்சன், “லாக்கி ஒரு அதிவேகப்பந்து வீச்சாளர், மில்ன காயத்தினால் ஆட முடியாத போது அவருக்கு சரியான ஒரு மாற்றாகவே லாக்கி பெர்குசனை தேர்வு செய்துள்ளோம்.

இவர் சீராக 140க்கு மேல் வீசும் போது அடிக்கடி மணிக்கு 150 கிமீ வேகத்திற்கும் கூடுதலாக மிக சீரான முறையில் வீசி வருகிறார். இந்தத் தொடர் பெர்குசனுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு. அவரது பந்துவீச்சில் ஒரு ஆச்சரியகரமான ஒரு தன்மை உண்டு. இந்த வேகத்தில் வீசும் ஒரு பவுலரை எந்த ஒரு பேட்ஸ்மெனும் விரும்ப மாட்டார்கள்” என்றார்.

நியூஸிலாந்து அணி வருமாறு: கேன் வில்லியம்சன், டாட் ஆஸ்ட்ல், டிரெண்ட் போல்ட், லாக்கி பெர்குசன், மார்டின் கப்தில், கொலின் டி கிராண்ட்ஹோம், மேட் ஹென்றி, டாம் லேதம், கொலின் மன்ரோ, ஜிம்மி நீஷம், ஹென்றி நிகோல்ஸ், மிட்செல் சாண்ட்னர், டிம் சவுதி, பி.ஜே. வாட்லிங்.

ஆஸ்திரேலியா அணி: ஸ்டீவ் ஸ்மித், ஜார்ஜ் பெய்லி, பேட் கமின்ஸ், ஏரோன் ஃபிஞ்ச், டிராவிஸ் ஹெட், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஹில்டன் கார்ட்ரைட் (ஆல்ரவுண்டர்), ஜேம்ஸ் பாக்னர், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்ப்பா.

முதல் போட்டி சிட்னியில் 4-ம் தேதியும் 2-ம் போட்டி கான்பெராவில் டிசம்பர் 6-ம் தேதியும், 3-ம் போட்டி மெல்போர்னில் டிசம்பர் 9-ம் தேதியும் நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்