IND vs BAN | 100 மீட்டருக்கு சிக்ஸர் விளாசிய உமேஷ் யாதவ்; பந்து வீசி ஸ்டம்பையும் பறக்கவிட்டார்

By செய்திப்பிரிவு

சட்டோகிராம்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் உமேஷ் யாதவ் 100 மீட்டருக்கு சிக்ஸர் விளாசி அசத்தி இருந்தார். அதோடு இந்த போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக பந்து வீசியபோது ஸ்ட்ரைக்கில் இருந்த யாஸிர் அலியை க்ளீன் போல்ட் செய்தார். அந்த ஸ்டம்ப் சில அடிகளுக்கு காற்றில் பறந்திருந்தது.

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. சட்டோகிராமில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. தற்போது வங்கதேச அணி மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில் விளையாடி வருகிறது.

அரை சதம் கடந்த அஸ்வின் அவுட் ஆனதும் களத்திற்கு பேட் செய்ய வந்தார் உமேஷ் யாதவ். அவர் எதிர்கொண்ட இரண்டாவது பந்தில் மிட்விக்கெட் திசையில் சுமார் 100 மீட்டருக்கு சிக்ஸர் விளாசி மிரட்டி இருந்தார். அந்த ஓவரை மெஹதி ஹசன் வீசியிருந்தார். பின்னர் மீண்டும் ஒரு சிக்சர் விளாசி இருந்தார் அவர். முதல் இன்னிங்ஸில் 10 பந்துகளை எதிர்கொண்டு மொத்தம் 15 ரன்கள் எடுத்திருந்தார்.

அதே போலவே அவர் வீசிய இரண்டாவது ஓவரில் வங்கதேச வீரர் யாஸிர் அலி விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். அந்த பந்து இன்சைட் எட்ஜ் ஆகி லெக் ஸ்டம்பை தகர்த்தது. அது சில அடி தூரம் காற்றில் பறந்திருந்தது. அதே போலவே மற்றொரு இந்திய பவுலர் சிராஜ் 3 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE