சட்டோகிராம்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 203 பந்துகளை எதிர்கொண்ட இந்திய வீரர் புஜாரா 90 ரன்கள் எடுத்து அவுட்டாகி உள்ளார். அவர் கடைசியாக விளையாடிய 51 டெஸ்ட் இன்னிங்ஸில் 14 அரை சதங்களை பதிவு செய்துள்ளார். இருந்தாலும் சதத்திற்கான அவரது தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்திய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவர் புஜாரா. டெஸ்ட் அணியில் ரெகுலர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 165 இன்னிங்ஸில் 6882 ரன்கள் குவித்துள்ளார். இதில் 18 சதங்கள் மற்றும் 35 அரை சதங்கள் அடங்கும்.
வங்கதேச அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இளம் வீரர்கள் பந்த் மற்றும் ஷ்ரேயஸ் ஐயருடன் இணைந்து நெருக்கடியில் தவித்து வந்த அணியை மீட்டுள்ளார் புஜாரா. பந்த் உடன் 64 ரன்களுக்கும், ஷ்ரேயஸ் உடன் 149 ரன்களுக்கும் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார். இருந்தாலும் அவரால் சதம் பதிவு செய்ய முடியவில்லை. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 90 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் எடுத்துள்ளது. ஷ்ரேயஸ் ஐயர், 82 ரன்களுடன் நாளைய ஆட்டத்தை தொடருவார்.
கடைசியாக கடந்த 2019 வாக்கில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னி மைதானத்தில் 193 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பிறகு அவர் இதுவரை விளையாடி உள்ள 51 இன்னிங்ஸில் ஒரு சதம் கூட பதிவு செய்யவில்லை. ஆனால், இந்த இடைப்பட்ட காலத்தில் 14 அரை சதங்களை பதிவு செய்துள்ளார்.
» 2022-ன் டாப் 10 இந்திய வெப் சீரிஸ் - ஐஎம்டிபி பட்டியலில் ‘பஞ்சாயத்’ முதலிடம்
» 50 வயது தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகள்: இ(ணை)தயத்தைக் கவரும் கதை
90+ ரன்களுக்கு மேல் இந்த கடைசி 51 இன்னிங்ஸில் இரண்டு முறை அவுட்டாகி உள்ளார். 80+ ரன்களில் ஒரு முறையும், 70+ ரன்களில் இரண்டு முறையும் விக்கெட்டை இழந்துள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் 8-வது இடத்தில் உள்ளார் புஜாரா.
6-வது இடத்தில் கோலி 8075 ரன்களுடன் உள்ளார். சச்சின் (15,921 ரன்கள்) முதல் இடத்திலும், திராவிட் (13,265 ரன்கள்) இரண்டாவது இடத்திலும், கவாஸ்கர் (10,122 ரன்கள்) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago