தோகா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் முதல் அணியாக பைனலுக்கு முன்னேறியுள்ளது அர்ஜென்டினா.
முதல் அரையிறுதி போட்டியில் குரோஷியா மற்றும் அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நள்ளிரவு 12.30 மணி அளவில் தோகாவில் உள்ள லுசைல் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் பலமிக்க இரு அணிகளும் ஆக்ரோஷமாக தொடங்கின. என்றாலும், ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட அர்ஜென்டினா அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான லயோனல் மெஸ்ஸி முதல் கோல் அடித்தார்.
இந்த கோல் மூலம் ஃபிஃபா உலகக்கோப்பையில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் மெஸ்ஸி. அர்ஜென்டினாவின் கோல் எண்ணிக்கையை மெஸ்ஸி தொடங்கிவைக்க அவருக்கு பக்கபலமாக இருந்தது அணியை முன்னிலை பெறவைத்தது ஜூலியன் அல்வாரெஸ். இன்றைய ஆட்டத்தின் ஹீரோ இவர் எனலாம். ஏனென்றால், மெஸ்ஸி கோல் அடித்த அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், அதாவது ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் சிறப்பான கோல் ஒன்றை அடித்து முதல் பாதியில் குரோஷியாவை விட 2 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெறவைத்தார்.
இரண்டாம் பாதியில் ஆட்டத்தின் 69வது நிமிடத்திலும் ஜூலியன் அல்வாரெஸ் கோல் அடித்து கெத்து காட்டினார். இதனால் அர்ஜென்டினா 3 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. மெஸ்ஸி மற்றும் அல்வாரெஸ் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீள குரோஷியா பல முறை முயன்றும் முடியவில்லை. ஆட்டத்தின் இறுதியில் 3 - 0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி அர்ஜென்டினா முதல் அணியாக நடப்பு உலகக்கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
» பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை | தொடர்ச்சியாக மூன்று போட்டிகளை வென்ற இந்தியா
» FIFA WC | மோட்ரிச் vs மெஸ்ஸி: 16 ஆண்டுகளாக எதிரெதிரே சமர் செய்யும் ஜாம்பவான்கள்
1978-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா, 1986-ல் டீகோ மரடோனா தலைமையில் உலகக்கோப்பையை வென்றது. அதன்பின் 36 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மகுடம் சூடும் முனைப்புடன் விளையாடிய அர்ஜென்டினா இப்போது இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸி 2-வது முறையாக உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட உள்ளார். 2014-ல் ஜெர்மனியிடம் தோல்வியடைந்த இறுதி ஆட்டத்திலும் மெஸ்ஸி பங்கேற்றிருந்தார். கிளப்களில் பல்வேறு பட்டங்களை வென்றுள்ள மெஸ்ஸி, தேசிய அணிக்காக கோபா அமெரிக்கா பட்டம் மட்டுமே வென்றுள்ளார். அவரது கோப்பை சேகரிப்பில் உலக சாம்பியன் பட்டம் மட்டுமே வறட்சியாக உள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago