இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் நடித்த விளம்பரம் ஒன்று கடும் சர்ச்சையை எழுப்ப, அந்த வீடியோவை சமூக வலைதள ஹேண்டில்களில் இருந்து நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடும் வீரரான ரிஷப் பந்தின் ஆட்டம் சோபிக்கவில்லை என்ற காரணங்களால் அவரது இடம் இந்திய அணியில் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இந்த சர்ச்சை எழுந்துள்ளது.
ரிஷப் பந்த் நடித்த அந்த ட்ரீம் லெவன் விளம்பர வீடியோவில் இந்திய பாரம்பரிய இசைக் கலைஞர் போன்ற தோற்றத்துடன் வருகிறார். மூன்று மைக்குகள் அருகே வந்து இந்துஸ்தானி இசை ஆலாபனை போல் செய்து செமயாக சொதப்புவார். சொதப்பி விட்டு கடைசியில் “Thank God, I followed my dream” என சொல்வார். அதாவது நல்ல வேளை, கடவுளுக்கு நன்றி, நான் என் கனவைப் பின்பற்றினேன் என ஆங்கிலத்தில் சொல்லி இருப்பார். கிரிக்கெட் மீதான தன் கனவை அவர் தொடர்ந்து பின்பற்றாமல் போயிருந்தால் தோல்வியடைந்த இசைக் கலைஞனாகியிருப்பார் என்ற ஒருவிதமான நகைச்சுவைப் பொருளில் ட்ரீம் லெவன் அந்த விளம்பரத்தை உருவாக்கி இருக்கும்.
இந்த வீடியோவை ரிஷப் பந்த் தன் சமூக வலைதள ஹேண்டில்களில் இருந்து இன்று நீக்கிவிட்டார். இதற்குக் காரணம் இந்தியப் பாரம்பரிய இசைக் கலைஞர்கள் பலர் அவர் நடித்த இந்த விளம்பரப் படத்தை கடுமையாக எதிர்த்தனர் என்பதே. பாடகி கவுஷிகி சக்ரவர்த்தி, இந்த விளம்பரம் குறித்து விமர்சனம் செய்த போது, “நான் இந்திய பாரம்பரிய இசையை பயிற்சி செய்து வருகிறேன். நான் கிரிக்கெட் பார்ப்பதில்லை. ஆனால், அதை மரியாதைக் குறைவாகவும் பேசியதில்லை. ஒரு விஷயத்தில் உங்களுக்குப் பயிற்சி இல்லை என்றால் குறைந்தபட்சம் அதை அவமதிக்காமல் இருப்பது நாகரிகம் அல்லவா. நம் பாரம்பரியத்தை நாமே கேலி செய்வது நம்மை முட்டாளாக்கும் செயல் அல்லவா? இந்த விளம்பரம் என்னில் ஏற்படுத்திய அருவருப்பை வெளியிட என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்திய பாரம்பரிய இசையைக் கேவலப்படுத்தி தன் அதிர்ஷ்டத்தை எட்டியதாக சொல்லும் அந்த விளம்பரம் அறவே சகிக்கவில்லை” என்று கண்டித்திருந்தார்.
» “மோடியை கொல்ல தயாராக இருங்கள்...” - காங்கிரஸ் மூத்த தலைவரின் பேச்சால் பெரும் சர்ச்சை
» நாற்காலி முதல் காபி இயந்திரங்கள் வரை: ட்விட்டர் அலுவலக பொருட்களை ஏலம் விடும் எலான் மஸ்க்?
அந்த விளம்பர வீடியோவை சமூக வலைதள பக்கங்களில் இருந்து பந்த் நீக்கியவுடன் அவருக்கு நன்றி தெரிவித்த பாடகி கவுஷிகி, “எனக்கு ரிஷப் பந்த் மீது தனிப்பட்ட முறையில் எந்த ஒரு காழ்ப்பும் இல்லை. வாழ்க்கையில் அவர் முன்னேற என் வாழ்த்துகள். இந்த விளம்பரத்தை மற்ற சமூக ஊடகங்களிலிருந்தும் நீக்க யாரை அணுக வேண்டும் என்பதற்கும் ரிஷப் பந்த் உதவ வேண்டும்” என சொல்லி தனது நன்றியை தெரிவித்திருந்தார்.
சிதார் இசைக்கலைஞர், புர்பயான் சாட்டர்ஜி தன் கண்டனத்தில், “இந்த விளம்பரம் இந்திய பாரம்பரிய இசையை விகடமாக சித்தரிக்கிறது. இந்த விளம்பரத்தைப் பார்த்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இப்படி நடப்பது முதல் முறையல்ல. இந்திய இசைப் பாரம்பரியத்துக்கு என்று உலகம் முழுதும் பெரிய மதிப்பும் மரியாதையும் உள்ளது. இந்தக் கலை வடிவத்தை சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் போன்ற கிரிக்கெட் லெஜண்ட்கள் கொண்டாடுகின்றனர்” என்றார்.
ட்ரீம் லெவன் விளம்பரம் மிகப் பிரசித்தமானது. இதே ட்ரீம் லெவன் விளம்பரத்தில் ரோகித் சர்மா கேக் தயாரிப்பவராகவும், ஹர்திக் பாண்டியா சிகையலங்காரம் செய்பவராகவும் வருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது ஒரு நகைச்சுவை விளம்பர வீடியோ. நகைச்சுவையில் எந்த ஒரு உன்னதமானதும் அதன் போக்கில் இடம்பெறும் அதே வேளையில் கீழான விவகாரமும் அதன் போக்கில் இடம்பெறுவது நகைச்சுவையின் உள்ளார்ந்த ஒரு கூறாகும்.
ரிஷப் பந்த் நடித்த விளம்பரத்தில் மூன்று மைக்குகளைக் கண்டவுடன் ஸ்டம்ப் போல் அதைப் பாவித்து சுருதி விலகிய ஓர் ஆலாபனையை செய்து கடைசியில் கேட்ச் பிடிப்பது போல் வலது புறம் ஒரு கையை நீட்டி சாய்வார். ஒருவிதத்தில் கிரிக்கெட்டையும், விக்கெட் கீப்பிங்கையும் கிண்டல் செய்வது போல்தான் அந்த விளம்பரம் இருந்தது.
ஆனால் ஒவ்வொருவர் பார்வையும் ஒவ்வொரு விதம். அந்த வகையில் பாரம்பரிய இசைக்கலைஞர்கள், இசை விற்பன்னர்களிடத்தில் இந்த விளம்பரம் வேதனையை ஏற்படுத்தியதையும் புரிந்து கொண்டு ரிஷப் பந்த் தன் சமூக ஊடக பக்கத்திலிருந்து இந்த விளம்பரத்தை நீக்கியுள்ளமையும் பாராட்டுகளை ஈர்த்துள்ளது.
ரிஷப் பந்த், இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே சட்டோகிராம் மைதானத்தில் புதன்கிழமை தொடங்கும் டெஸ்ட் தொடரில் விளையாட இந்திய அணிக்குத் திரும்பியுள்ளார். சர்ச்சைக்கு காரணமான வீடியோ...
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago